சோமாலியாவில் ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் தற்கொலை குண்டுத் தாக்குதல் - 7 பேர் பலி - News View

About Us

About Us

Breaking

Sunday, September 26, 2021

சோமாலியாவில் ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் தற்கொலை குண்டுத் தாக்குதல் - 7 பேர் பலி

சோமாலியாவின் தலைநகரான மொகடிசூவில், ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் சனிக்கிழமை தற்கொலை குண்டுத் தாக்குதல் ஒன்று இடம் பெற்றுள்ளது.

இதில் ஏழு பேர் பலியானதுடன், எட்டு பேருக்கு காயம் ஏற்பட்டிருப்பதாக மாவட்ட காவல்துறை முதன்மை அதிகாரி முகாவியே அஹ்மத் முடே பத்திரிகையாளர்களிடம் கூறியுள்ளார்.

இந்த தாக்குதலுக்கு, ஒரு சிறிய செய்தி அறிக்கை மூலம் ஆயுத மேந்திய கடும்போக்குவாதிகள் குழுவான அல் ஷபாப் பொறுப்பேற்றுள்ளது.

ஜனாதிபதி மாளிகையை நோக்கிக்குச் சென்று கொண்டிருந்த பாதுகாப்பு வாகனங்களில் ஒன்றை தாக்க இலக்கு வைக்கப்பட்டிருந்தது

காவலர்கள் அந்த வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனை செய்ய முயன்ற போது வெடி குண்டு வெடித்ததாக, சம்பவத்தைப் பார்த்த ஒருவர் ஏஎஃப்பி செய்தி முகமையிடம் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment