இலங்கையில் கொவிட் தொற்றுக்குள்ளான கர்ப்பிணி 3 குழந்தைகளை பிரசவித்தார் - News View

Breaking

Thursday, September 9, 2021

இலங்கையில் கொவிட் தொற்றுக்குள்ளான கர்ப்பிணி 3 குழந்தைகளை பிரசவித்தார்

கொவிட்-19 தொற்றுக்குள்ளான கர்ப்பிணி பெண் ஒருவர் இன்றைய தினம் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளார்.

கொழும்பு டி சொய்சா மகப்பேற்று போதனா வைத்தியசாலையில் வைத்து இப்பிரசவம் இடம்பெற்றுள்ளதோடு, 27 வயதான நீர்கொழும்பைச் சேர்ந்த பெண் ஒருவரே இவ்வாறு 3 குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த கர்ப்பிணி தாய் கொவிட் தொற்றுக்கு உள்ளாகியிருந்தமையின் காரணமாக அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள இன்றைய தினம் முற்பகல் வைத்திய குழாமினால் தீர்மானிக்கப்பட்டது.

அதற்கமைய முன்னெடுக்கப்பட்ட அறுவை சிகிச்சையில் குறித்த பெண் மூன்று குழந்தைகளை பிரசவித்துள்ளதாகவும், தற்போது தாயும் குழந்தைகளும் நலமுடன் இருப்பதாகவும் டி சொய்சா வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம் கொரோனோ தொற்றுக்குள்ளான நிலையில், சிகிச்சை பெற்று வந்த கர்ப்பிணித் தாயொருவர் ஒரே சூலில் 4 குழந்தைகளைப் பெற்றெடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment