ஆசிரிய கலாசாலைகளின் 2019 / 2020 கற்கை நெறியை நிறைவு செய்து பாடசாலைகளுக்கு அனுப்புமாறு பணிப்பு - News View

Breaking

Friday, September 10, 2021

ஆசிரிய கலாசாலைகளின் 2019 / 2020 கற்கை நெறியை நிறைவு செய்து பாடசாலைகளுக்கு அனுப்புமாறு பணிப்பு

ஆசிரிய கலாசாலைகளில் 2019 / 2020 கல்வியாண்டுக்குரிய கற்கை நெறியை 08.09.2021 நிறைவு செய்து அவர்களை 09.09.2021 தொடக்கம் பாடசாலைகளுக்கு அனுப்புமாறு இசுருபாய கல்வி அமைச்சின் செயலாளர் ஆசிரிய கலாசாலை அதிபர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

ஆசிரிய மாணவர்களுக்கென பரீட்சைத் திணைக்களத்தால் நடத்தப்படவிருந்த இறுதிப்பரீட்சைகள் கொவிட் நிலைமையால் திகதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டிருப்பதாலேயே கல்வி அமைச்சு இந்த முடிவை எடுத்திருப்பதாக அறியவருகின்றது.

இதன்படி கோப்பாய் ஆசிரிய கலாசாலையில் இருந்து 376 ஆசிரிய மாணவர்கள் கற்கை நெறியை நிறைவு செய்திருப்பதாகவும் இவர்களுக்குரிய கற்கை நெறி பெரும்பாலும் இணைய வழியில் கல்வி அமைச்சின் எல்எம்எஸ் (e -thaksalawa - LMS) தளத்தின் ஊடாக முன்னெடுக்கப்பட்டதாகவும் கலாசாலை அதிபர் வீ. கருணலிங்கம் தெரிவித்தார்.

No comments:

Post a Comment