அட்லாண்டா மிருகக்காட்சி சாலையில் 13 கொரில்லாக்களுக்கு கொரோனா - News View

Breaking

Sunday, September 12, 2021

அட்லாண்டா மிருகக்காட்சி சாலையில் 13 கொரில்லாக்களுக்கு கொரோனா

அட்லாண்டா மிருகக்கட்சி சாலையில் குறைந்தது 13 கொரில்லாக்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளது.

இலகுவான இருமல், மூக்கு ஒழுகுதல் மற்றும் பசியின்மை போன்ற அறிகுறிகளை கொரில்லாக்கள் வெளிப்படுத்திய பின்னர் அவற்றின் மாதிரிகள் பெறப்பட்டு சோதனைக்கு அனுப்பப்பட்டன.

அட்லாண்டாவின் விலங்குகள் பராமரிப்பாளர்கள் கொரில்லாக்காளின் மலம் மாதிரிகள் மற்றும் நாசி மற்றும் வாய்வழி துடைப்புகளை எடுத்து அவற்றை ஜோர்ஜியா பல்கலைக்கழகத்தில் உள்ள ஏதென்ஸ் கால்நடை நோயறிதல் ஆய்வகத்திற்கு அனுப்பினர்.

இதன் மாதிரி ஆய்வு முடிவுகளிலேயே கொரில்லாக்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மிருகக்காட்சி சாலையின் இணையதளத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையில், அதன் விலங்கு பராமரிப்பாளர் குழுவின் உறுப்பினர்களால் கொரில்லாக்களுக்கு வைரஸ் தொற்று பரவியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் மிருகக் கட்சிசாலையின் விலங்கு பராமரிப்பாளர்கள் பாதிக்கப்பட்ட கொரில்லாக்களை மிகவும் உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர்.

மேலும் கொரில்லாக்கள் விரைவில் பூரண குணமடையும் என்றும் அவர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

No comments:

Post a Comment