நீதியமைச்ரை சந்தித்து கலந்துரையாடிய SLPP சட்டத்தரணிகள் சங்கத்தினர் - News View

About Us

About Us

Breaking

Sunday, August 1, 2021

நீதியமைச்ரை சந்தித்து கலந்துரையாடிய SLPP சட்டத்தரணிகள் சங்கத்தினர்

கொவிட் காலத்தில் நீதிமன்ற நடவடிக்கைகள் தொடர்பாக நீதி அமைச்சர், ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரிக்கும் பொதுஜன பெரமுன சட்டத்தரணிகள் சங்கத்தினருக்குமிடையே சந்திப்பொன்று வெள்ளிக்கிழமை நீதி அமைச்சில் நடைபெற்றுள்ளது.

சந்திப்பில் கொவிட்19 தொற்று நிலைமையில் நீதிமன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளல், சட்ட மறுசீரமைப்பு தொடர்பான திட்டங்கள், நீதிமன்ற தொகுதியில் மேற்கொள்ளப்பட வேண்டிய அபிவிருத்திகள் போன்ற பல விடயங்கள் குறித்து வெற்றிகரமாக கலந்துரையாடப்பட்டது.

அத்துடன் சட்டத்தரணிகள் பொதுவாக எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் அவர்களின் யோசனைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

அச்சந்தர்ப்பத்தில் சில பிரச்சினைகளை தீர்க்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு நீதியமைச்சர் ஆலோசனை வழங்கினார்.

இச் சந்திப்பில் பொதுஜன பெரமுனவின் சட்டத்தரணிகள் சங்கத் தiலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி டபிள்யு தயாரத்ன,சங்கத்தின் செயலாளர் சட்டத்தரணி அத்துல த சில்வா உள்ளிட்ட பொதுஜன பெரமுனவின் சட்டத்தரணிகள் சங்க அங்கத்தவர்கள்,நீதியமைச்சின் பிரத்தியேக செயலாளர் சட்டத்தரணி ஜனக ரணதுங்க, இணைப்புச் செயலாளர் சட்டத்தரணி நளீன் சமரகோன் உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

No comments:

Post a Comment