பொட்ட நௌபரின் சடலத்தை ஓட்டமாவடியில் அடக்கம் செய்ய நடவடிக்கை - News View

About Us

About Us

Breaking

Monday, August 30, 2021

பொட்ட நௌபரின் சடலத்தை ஓட்டமாவடியில் அடக்கம் செய்ய நடவடிக்கை

கொரோனா தொற்றினால் உயிரிழந்த ‘பொட்ட நௌபர்’ என அழைக்கப்படும் மொஹமட் நௌபரின் சடலம், இறுதிக் கிரியைகளுக்காக இன்று (30) மட்டக்களப்பு - ஓட்டமாவடி மஜ்மா நகருக்கு  கொண்டு செல்லப்பட்டுள்ளது.

நேற்று (29) பிரேத பரிசோதனைகள் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன், மரபணு பரிசோதனையும் (DNA) நடத்தப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

சிறுநீரக நோய் மற்றும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த நௌபர், சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.

‘மொஹமட் நௌபர்’ மேல் நீதிமன்ற முன்னாள் நீதிபதி சரத் அம்பேபிட்டிய கொலை தொடர்பில் குற்றவாளியாக அடையாளங்காணப்பட்டு பூசா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment