இரண்டு நாளில் இரண்டாவது தலைநகரை கைப்பற்றிய தாலிபன்கள் - News View

Breaking

Saturday, August 7, 2021

இரண்டு நாளில் இரண்டாவது தலைநகரை கைப்பற்றிய தாலிபன்கள்

வடக்கு ஆப்கானித்தானில் உள்ள ஜாஸ்ஜான் மாகாணத்தின் தலைநகர் ஷெபெர்கானை தாங்கள் கைப்பற்றியுள்ளதாக தாலிபன்கள் அறிவித்துள்ளனர். 

இரண்டு நாட்களில் தாலிபன்கள் வசம் சென்றுள்ள இரண்டாவது மாகாணத் தலைநகர் இதுவாகும்.

தங்கள் படையினர் இன்னும் அந்த நகரத்தில் இருப்பதாகவும் விரைவில் தாலிபன்களை வெளியேற்றுவார்கள் என்றும் ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஒருவர் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

நேற்று தாலிபன்கள் நிம்ரோஸ் மாகாண தலைநகரான சராஞ் நகரைக் கைப்பற்றினர்.

சமீப வாரங்களில் தாலிபன்கள் ஆஃப்கனின் பல பகுதிகளையும் வசப்படுத்தி வருகின்றனர்.

அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்ற பின்பு இந்த ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதிக்கு முன்னரே அமெரிக்கப் படைகள் முழுமையாக ஆப்கானிஸ்தானிலிருந்து விலக்கப்படும் என்று அறிவித்திருந்தார்.

இதைத் தொடர்ந்து அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து விலகி வருகின்றன. 

அமெரிக்கா தலைமையிலான மேற்கத்தியப் படைகள் பெருமளவு ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறிவிட்ட நிலையில், நாட்டின் பல பகுதிகளை தாலிபன் தீவிரவாதிகள் கைப்பற்றி வருகிறார்கள்.

இரட்டை கோபுர தாக்குதலைத் தொடர்ந்து, 20 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்கா ஆப்கானிஸ்தான் மீது படையெடுத்தது. அதற்கு முன்பு அடிப்படைவாத அமைப்பான தாலிபன் ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தில் இருந்தது.

No comments:

Post a Comment

Post Bottom Ad