உலக நாடுகளில் வாழும் இலங்கையர்கள் நெருக்கடியான இன்றைய நிலையில் ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும் - இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி - News View

Breaking

Saturday, August 28, 2021

உலக நாடுகளில் வாழும் இலங்கையர்கள் நெருக்கடியான இன்றைய நிலையில் ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும் - இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி

லியோ நிரோஷ தர்ஷன்

கொவிட் தொற்றை கட்டுப்படுத்தும் போராட்டத்திற்காக மருத்துவ உபகரணங்கள் நன்கொடையாக கிடைக்கப் பெறுகின்றன. நேரடி நிதி விடுவிப்பு ஊடாக 200 இயற்கை சுவாச கருவிகள் விரைவில் கிடைக்கப் பெறவுள்ளன. இவை நோர்வே ஊடாக கிடைக்கப் பெறவுள்ளதுடன் அமெரிக்காவிலிருந்து தொடர்பாடல்கள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவித்த இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே, உலக நாடுகளில் வாழும் இலங்கையர்கள் நெருக்கடியான இன்றைய நிலையில் ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் கொவிட்-19 தொற்று மிகவும் மோசமாக பரவி வருகின்றது. தடுப்பூசியை மாத்திரம் நம்பிய நிலையில் அரசாங்கம் செயற்படுகின்றது.

ஆனால் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தொற்றாளர்களுக்கு தேவையான சிகிச்சைகள் மற்றும் அவற்றுக்கான உபகரணங்கள் குறித்து கவனத்தில் கொள்ளப்பட வேண்டியுள்ளதாக மருத்துவ அதிகாரிகள் மற்றும் சுகாதார பிரிவினர் வலியுறுத்தி வருகின்றனர்.

குறிப்பாக நோயாளிகளுக்கான கட்டில்கள் மற்றும் இயற்கை சுவாசக்கருவி போன்றவை போதுமானதாக இல்லை என்பதே பலரினதும் குற்றச்சாட்டாக உள்ளது.

நாளுக்கு நாள் தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளது. இன்று சனிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்ட தரவுகளின்படி 4561 பேர் ஒரே நாளில் கொவிட் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இதுவரையில் சுமார் 55 ஆயிரத்து 399 பேர் வரை நாடளாவிய ரீதியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவ்வாறானதொரு பெரும் தொகை நோயாளர்களுக்கு சிகிச்சை அளிக்க கூடிய கட்டமைப்பு இலங்கையின் வைத்திசாலைகளில் காணப்படுகின்றதா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் தொடர்ந்தும் நாளுக்கு நாள் தொற்றாளர்கள் அதிகரிக்கின்ற நிலையில் சுகாதார கட்டமைப்பிற்கு பாரிய சவாலாக அமையும் எனவும் அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment