அஜித் ரோஹண குணமடைந்து வீடு திரும்பினார் : சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்பியவர்கள் தொடர்பில் கவலை தெரிவிப்பு - News View

Breaking

Friday, August 27, 2021

அஜித் ரோஹண குணமடைந்து வீடு திரும்பினார் : சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்பியவர்கள் தொடர்பில் கவலை தெரிவிப்பு

கொவிட் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண குணமடைந்து இன்று (27) வைத்தியசாலையிலிருந்து வீடு திரும்பியுள்ளார்.

தான் தற்போது குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும், தற்போது சுய தனிமைப்படுத்தலில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கொவிட் தொற்று கண்டறியப்பட்ட உடனேயே சிகிச்சைக்கு உட்படுமாறு நாட்டு மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ள அஜித் ரோஹண, தனது நலன் தொடர்பில் அக்கறை கொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

அத்துடன், தனது உடல்நிலை மிக மோசமாகவுள்ளதாக தெரிவித்து சமூக வலைத்தளங்களில் போலியான புகைப்படங்களை வெளியிட்டவர்கள் தொடர்பில் தான் கவலையடைவதாக அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment