வைரஸ் பரவலை அரசாங்கத்தினால் மாத்திரம் கட்டுப்படுத்த முடியாது, மக்களும் முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும் - பேராசிரியர் திஸ்ஸ விதாரண வேண்டுகோள் - News View

About Us

About Us

Breaking

Saturday, August 21, 2021

வைரஸ் பரவலை அரசாங்கத்தினால் மாத்திரம் கட்டுப்படுத்த முடியாது, மக்களும் முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும் - பேராசிரியர் திஸ்ஸ விதாரண வேண்டுகோள்

இராஜதுரை ஹஷான்

கொவிட்-19 வைரஸ் பரவலை அரசாங்கத்தினால் மாத்திரம் கட்டுப்படுத்த முடியாது. மக்களும் முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என லங்கா சமசமாஜ கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.

ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டது தொடர்பில் வினவிய போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்ட வேளை பெரும்பாலானோர் மதுபானசாலைகளுக்கு முன்பாக செயற்பட விதம் வெறுக்கத்தக்கது. ஊரடங்கு சட்டத்தை மீறுபவர்களுக்கு எதிராக கடுமையான தண்டனை அவ்வேளையிலே வழங்க வேண்டும்.

பாதுகாப்பு தரப்பினருக்கு பயந்து முகக்கவசத்தை அணிய வேண்டாம், கொவிட் வைரஸிற்கு பயந்து பொதுமக்கள் முகக்கவசத்தை அணிந்து பொறுப்புடன் செயற்பட்டால் கொவிட் தாக்கத்தை வெற்றிக் கொள்ள முடியும்.

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை கருத்திற் கொண்டு தற்போது நாடு தழுவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. அரசாங்கம் அனைத்து காரணிகளையும் கருத்திற் கொண்டு ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்தியுள்ளது.

தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் சுகாதாரம், பொருளாதாரம் ஆகிய இரண்டு விடயங்கள் குறித்தும் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தால் கொவிட் தாக்கத்தை கட்டுப்படுத்தும் செயற்பாடுகளும், மருத்துவ துறையில் ஏனைய செயற்பாடுகளும், அரச செயலொழுங்கும் முழுமையாக பாதிக்கப்படும் ஆகவே அனைத்து விடயங்களையும் ஆராய்ந்தே செயற்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment