மூன்றாவது டோஸ் தேவையெனின் அதனை வழங்குவதற்கு இலங்கை தயார் என்கிறார் வைத்தியர் பிரசன்ன குணசேன - News View

About Us

About Us

Breaking

Monday, August 9, 2021

மூன்றாவது டோஸ் தேவையெனின் அதனை வழங்குவதற்கு இலங்கை தயார் என்கிறார் வைத்தியர் பிரசன்ன குணசேன

கொவிட்-19 தொற்றுக்கு எதிரான மூன்றாவது டோஸ் தேவையெனின், அதனை வழங்குவதற்கு இலங்கை தயாராக இருப்பதாக விசேட வைத்தியர் பிரசன்ன குணசேன தெரிவித்தார்.

எதிர்வரும் செப்டெம்பர் இறுதிக்குள் உலக சனத் தொகையில் 40 சதவீதமானோருக்கு கொவிட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸை வழங்குவதற்கு உலக சுகாதார ஸ்தாபனம் எதிர்பார்த்துள்ளது.

அடுத்த வருடம் ஜூன் மாதமளவில் உலக சனத் தொகையில் 70 சதவீதமானோருக்கு தடுப்பூசியை ஏற்ற எதிர்பார்க்கப்படுகிறது.

இரண்டாவது டோஸ் முழுமையாக வழங்கப்படும் வரையில், மூன்றாவது டோஸை வழங்காமலிருக்குமாறு உலக சுகாதார ஸ்தாபனம் உலக நாடுகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

எவ்வாறாயினும், மூன்றாவது டோஸ் தேவையெனின், அதனை வழங்குவதற்கு இலங்கை தயாராக இருப்பதாக விசேட வைத்தியர் பிரசன்ன குணசேன தெரிவித்தார்.

இதனிடையே கொவிட்-19 தடுப்பூசியின் முதல் டோஸினை இதுவரை பெற்றுக் கொள்ளாத மேல் மாகாணத்தில் வசிக்கும் 60 வயதுக்கு மேற்பட்ட மற்றும் கடுமையான நோய் நிலைமைகளுக்கு ஆளாகியுள்ள மக்களுக்கு இன்று (ஆகஸ்ட் 10) முதல் மூன்று நாட்களுக்கு தடுப்பூசி வழங்கப்படவுள்ளது.

1906 எனும் இலக்கத்துடன் தொடர்பு கொண்டு பெறுநர்கள், தங்களது பெயரினை பதிவுசெய்யுமாறு அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

No comments:

Post a Comment