மலையகத்தில் தொடர் மழை, வான் கதவுகள் திறப்பு : பொதுமக்களுக்கு எச்சரிக்கை - News View

About Us

About Us

Breaking

Monday, August 9, 2021

மலையகத்தில் தொடர் மழை, வான் கதவுகள் திறப்பு : பொதுமக்களுக்கு எச்சரிக்கை

மத்திய மலைநாட்டில் கடந்த சில தினங்களாக நிலவி வரும் சீரற்ற காலநிலையினை தொடர்ந்து மத்திய மலை நாட்டில் தொடர் மழை பெய்து வருகிறது.

நீரேந்தும் பிரதேசங்களுக்கு பெய்து வரும் கடும் மழை காரணமாக லக்ஷபான நீர்த் தேக்த்தின் ஒரு வான் கதவு திறக்கப்பட்டுள்ளதாக மின்சார சபை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக கெனியோன் காசல்ரி, மவுசாகலை, விமலசுரேந்திர, பொல்பிட்டிய, மேல்கொத்மலை ஆகிய நீர்த் தேக்கங்களின் நீர் மட்டமும் மிக விரைவாக உயர்ந்து வருகிறது. 

இவ்வேளையில் நீர்த் தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்படலாம் என்பதனால் நீர்த் தேக்கத்திற்கு கீழ் தாழ் நிலப்பகுதியில் வாழும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். 

நுவரெலியா மாவட்டத்தில் பல பகுதிகளில் அடிக்கடி மழை பெய்து வருவதனால் மண்சரிவு அபாய பகுதிகளில் வாழும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் பொது மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளது.

இதேவேளை கொழும்பு ஹற்றன் மற்றும் நுவரெலியா ஹற்றன் வீதிகளில் மண்சரிவு அவதாம்ன நிலவுவதனால் இந்த வீதிகளை பயன்படுத்தும் வாகன சாரதிகள் மிகவும் அவதானமாக வாகனங்களை செலுத்துமாறு போக்குவரத்து பொலிஸார் சாரதிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஹற்றன் விசேட நிருபர்

No comments:

Post a Comment