தனிமைப்படுத்தும் ஊரடங்கு சட்டம் நீடிக்காது : மக்கள் தமது பொறுப்புக்களை உணர்ந்து செயற்படுவது முக்கியம் - சுகாதார அமைச்சர் கெஹலிய - News View

Breaking

Thursday, August 26, 2021

தனிமைப்படுத்தும் ஊரடங்கு சட்டம் நீடிக்காது : மக்கள் தமது பொறுப்புக்களை உணர்ந்து செயற்படுவது முக்கியம் - சுகாதார அமைச்சர் கெஹலிய

(எம்.ஆர்.எம்.வசீம்)

நாட்டை முடக்கி கொவிட் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு தீர்வு காண முடியாது. அவ்வாறு தீர்வு கண்ட நாடுகள் இருக்குமா என்பது சந்தேகம். அதனால் மக்கள் தங்கள் பொறுப்புக்களை உணர்ந்து செயற்படுவதே முக்கியமாகும். அத்துடன் தனிமைப்படுத்தும் ஊரடங்கு சட்டம் நீடிக்காது என்றே நான் நினைக்கின்றேன் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

நாட்டின் தற்போதைய நிலைமையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை தொடர்ந்து நீடிப்பதா இல்லையா என்பது தொடர்பில் குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், நாட்டை முழுமையாக முடக்கி அதன் மூலம் நல்ல பெறுபேற்றை பெற்றதில்லை என்பதுவே எனது தனிப்பட்ட கருத்தாகும். அதனால் நாங்கள் இந்த நிலைமையை உணர்ந்து, அனைவரும் மேற்கொள்ள வேண்டிய பொறுப்புகளை சரியான முறையில் நிறைவேற்றினால் எமக்கு கொவிட் நிலைமையை கட்டுப்படுத்திக் கொள்ள முடியும்.

அதனால் தற்போது அமுல்படுத்தி இருக்கும் தனிமைப்படுத்தும் ஊரடங்கு சட்டத்தை எதிர்வரும் 30ஆம் திகதிக்கு பின்னரும் நீடிக்க வேண்டியதில்லை என்றே நான் நினைக்கின்றேன்.

நாங்கள் இதனை சரியான முறையில் முகாமைத்துவம் செய்து கொண்டு ஒவ்வாெரு தனி நபரும் தனக்குரிய எல்லையை வரையறுத்துக் கொண்டு செயற்பட வேண்டும். அவ்வாறனதொரு வேலைத்திட்டத்தை அமைத்துக் கொண்டுதான் எமக்கு முன்னுக்கு செல்ல வேண்டி ஏற்படும் என்றே நான் நினைக்கின்றேன் என்றார்.

No comments:

Post a Comment