தௌபீக் எம்பியை தூற்றி, ஜெமீலை போற்றினேனா ? அதியுயர்பீட உறுப்பினர்களின் ஆதங்கம் - News View

About Us

About Us

Breaking

Monday, August 2, 2021

தௌபீக் எம்பியை தூற்றி, ஜெமீலை போற்றினேனா ? அதியுயர்பீட உறுப்பினர்களின் ஆதங்கம்

நேற்று “மு.கா தேசிய அமைப்பாளர் பதவியை மறுத்தது யார் ? ஏன் அது தௌபீக் எம்பிக்கு வழங்கப்பட்டது ? தலைவரின் எதிர்பார்ப்பு என்ன ?” என்ற தலைப்பில் கட்டுரை வெளியிட்டிருந்தேன்.

அதனை வாசித்த கட்சியின் பல அதிஉயர்பீட உறுப்பினர்களும், முக்கிய போராளிகளும் தொலைபேசி மூலமாக என்னை அழைத்து பாராட்டு தெரிவித்ததுடன், உற்சாகமும் வழங்கினர்.

அவர்களது உரையாடலிலிருந்து கட்சியின் முக்கியஸ்தர்கள் உண்மைகளை வெளியே கூற முடியாமல் அவதிப்படுவதனை உணரக்கூடியதாக இருந்தது. எது எப்படியிருந்தாலும் அவர்களது இரகசியம் பாதுகாக்கப்படும்.

ஆனாலும் அடிமட்டத்திலுள்ள சில அரை வேக்காடுகளுக்கு அந்த கட்டுரையின் அர்த்தம் புரியவில்லை. அதாவது தௌபீக் எம்பியை தூற்றி, ஜெமீலை போற்றி எழுதியதாகவே அவர்கள் கருதுகின்றனர்.

ஜெமீல் அவர்கள் “பிரதி தேசிய அமைப்பாளர்” என்ற காரணத்தினாலேயே அவரை குறிப்பிட வேண்டிய தேவை ஏற்பட்டது. அந்த இடத்தில் மன்சூராக இருந்தாலும் அதுதான் நியாயம்.

தௌபீக் எம்பியை பொறுத்தவரையில் தனிப்பட்டரீதியில் அவர் நல்ல மனிதர். அத்துடன் எனது நண்பர். ஆனால் அவர் இருபதாவது திருத்தத்திற்கு ஆதரவளித்தது மன்னிக்க முடியாத சமூக குற்றம்.

சமூக குற்றம் செய்தவர்களை சமூகம்தான் மன்னிக்க முடியுமே தவிர, தனி மனிதர்களினால் அல்ல.

எவ்வளவுதான் ஒருவர் நல்ல மனிதராக இருந்தாலும், அது அரசியலுக்குரிய தகுதியாக எடுத்துக்கொள்ள முடியாது.

தௌபீக் அவர்கள் அபிவிருத்தி அரசியலுக்கு சிறந்தவர். அது ஆளும் கட்சி அரசியலுக்கு மட்டுமே பொருத்தமானது.

ஆனால் சிறுபான்மை முஸ்லிம்களின் தனித்துவ அரசியலுக்கு அபிவிருத்தி அரசியல் பொருத்தமல்ல. அதாவது தௌபீக் எம்பி அவர்களுக்கு “சமூக அரசியல்” தெரியாது என்றுதான் குறிப்பிட்டிருந்தேனே தவிர, அவருக்கு ஒட்டுமொத்த அரசியலும் தெரியாது என்று குறிப்பிடவில்லை.

நேற்றைய கட்டுரையானது குற்றவாளிக்கு தண்டனை வழங்காமல் பதவி உயர்வு வழங்கியதுடன், கட்சியின் யாப்பினை தலைவர் மீறியுள்ளார் என்றும், கட்சியின் எந்த பதவியிலும் எவரிடமும் எந்த அதிகாரமும் இல்லை என்பதனையும் குறிப்பிட்டிருந்தேன்.

குற்றவாளியான தௌபீக் எம்பிக்கு பதவி உயர்வு வழங்கியதன் மூலம் தலைவரது அரசியல் நடிப்பினை இறைவன் வெளிப்படுத்திவிட்டான் என்பதுதான் நேற்றைய கட்டுரையின் சாராம்சமாகும்.

முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது

1 comment:

  1. Allah mannekka maattaa muslimgalukku seydda aneyaayam naattu makkalayum eematteyadai Allah wuum. Mannekka maattaa

    ReplyDelete