இணைய வழியூடான பணப்பரிமாற்றத்தை கைவிட்ட இலங்கை வர்த்தகர்கள் - News View

About Us

About Us

Breaking

Thursday, August 19, 2021

இணைய வழியூடான பணப்பரிமாற்றத்தை கைவிட்ட இலங்கை வர்த்தகர்கள்

(எம்.மனோசித்ரா)

இலங்கையில் கடன் அட்டை மற்றும் வங்கி அட்டை ஆகியவற்றை உபயோகித்து இணைய வழியூடாக பணம் செலுத்தும் செயற்பாடுகள் நேற்று புதன்கிழமை முதல் கைவிடப்பட்டுள்ளதாக இலங்கை வர்த்தகர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

வெளிநாடுகளுக்குச் சென்று இலங்கையிலுள்ள வங்கி அட்டைகளை பாவிக்கும் தரப்பினர் இதனால் பெறும் பாதிப்புக்களுக்கு முகங்கொடுத்துள்ளதோடு, இந்த நிலைமைக்கு முகங்கொடுத்துள்ளதால் தமது நாளாந்த செயற்பாடுகளை முழுமையாக ஸ்தம்பிதமடைந்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கையிலிருந்து இணைய வழி வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் இதனால் பெரும் நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளனர்.

அத்தோடு முகப்புத்தகம், வர்த்தக மேம்பாட்டு வேலைத்திட்டங்கள் உள்ளிட்டவற்றையும் நிறுத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

இந்த சிக்கல் தொடர்பில் இலங்கையிலுள்ள வங்கிகளிடம் கேட்ட போது, இலங்கையில் டொலர் இருப்பு மிகவும் குறைந்த மட்டத்தில் காணப்படுவதாகவும், எனவே வெளிநாடுகளுக்கு டொலரை அனுப்புவதை நிறுத்துவதற்காக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே வேறு மாற்று வழிகளை பின்பற்றுமாறு இலங்கையிலுள்ள வங்கிகள் தமது வாடிக்கையாளர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளன. எவ்வாறிருப்பினும் இதற்காக மாற்று வழி என்ன என்பது தொடர்பில் தெரிவிக்கப்படவில்லை என வாடிக்கையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment