இறுதிப் போட்டிக்கு தகுதி பெறவில்லை, வெளியேறினார் குமுது திசாநாயக்க - News View

About Us

About Us

Breaking

Tuesday, August 31, 2021

இறுதிப் போட்டிக்கு தகுதி பெறவில்லை, வெளியேறினார் குமுது திசாநாயக்க

(எம்.எம்.சில்வெஸ்டர்)

டோக்கியோ பராலிம்பிக்கின் பெண்களுக்கான டி47 பிரிவின் 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்கேற்ற குமுது திசாநாயக்க இறுதிப் போட்டிக்கு தகுதி பெறவில்லை.

8 ஆவது நாளான இன்று காலை நடைபெற்ற பெண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டிக்கான முதலாவது தகுதிகாண் சுற்றில் பங்கேற்ற குமுது திசாநாயக்க 13.31 செக்கன்களில் ஓடி முடித்து 8 ஆவது இடத்தை அடைந்தார்.

இந்த தகுதிகாண் சுற்றில் வெனிசுவேலாவின் லிஸ்பெலி மெரினா 12.14 செக்கன்களில் நிறைவு செய்து முதல் இடத்தைப் பிடித்தார்.

இதில் ஐக்கிய அமெரிக்காவின் யங் தேஜா (12.26 செக்.) சீனாவின் லீ லூ (12.58 செக்.) ஆகியோர் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களை பிடித்து நேரடியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறினர்.

இதையடுத்து நடைபெற்ற இரண்டாவது தகுதிகாண் சுற்றில் ஐக்கிய அமெரிக்காவின் மேசொன் பிரிட்னி (11.89 செக்.) போலாந்தின் அலிக்ஜா ஜெரோமின் (12.19 செக்.), சேர்பியாவின் சர்ஸ்கா சொகோ‍வொல் (12.43 செக்.) ஆகியோர் முதல் மூன்று இடங்களை பிடித்து நேரடியா இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றனர்.

இதேவேளை, நேரடியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இந்த ஆறு வீராங்கனைகளுடன் சிறந்த நேரப் பெறுதியில் ஈக்வடோரின் கியாரா றொட்றிகோஸ் (12.54 செக்.), ரஷ்ய பராலிம்பிக் குழுவின் மொகுச்சையா அலெக்ஸான்ட்ரா (12.64 செக்.) இருவரும் இன்றைய தினம் இலங்கை நேரப்படி மாலை 4.48 மணிக்கு நடைபெறும் இறுதிப் போட்டிக்கு முன்னேறினர்.

இந்த தகுதிகாண் சுற்றில் குமுது திசாநாயக்க தோல்வியடைந்தாலும் இப்‍ போட்டியில் பங்கேற்ற ஒரேயொரு தெற்காசிய வீராங்கனையாக விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

இவர் பங்கேற்கும் மற்றொரு போட்டி நிகழ்வான பெண்களுக்கான டி47 பிரிவின் நீளம் பாய்தல் போட்டி எதிர்வரும் மூன்றாம் திகதியன்று நடைபெறும்.

No comments:

Post a Comment