(எம்.மனோசித்ரா)
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் முன்னிலை சோசலிச கட்சி ஆகியவற்றுக்கிடையில் இன்று ஞாயிற்றுக்கிழமை விசேட கலந்துரையாடலொன்று நடைபெற்றது.
கொழும்பு 7, மஹகமசேகரமாவத்தையில் உள்ள முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினுடைய இல்லத்தில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.
சுதந்திர கட்சியின் சார்பில் அதன் தலைவர் மைத்திரிபால சிறிசேன கலந்து கொண்டதோடு முன்னிலை சோசலிச கட்சி சார்பில் சமீர கொஸ்வத்த, ரவீந்திர முதலிகே மற்றும் புபுது ஜயகொட ஆகியோர் கலந்து கொண்டனர்.
சீனா மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான அதிகாரத்துவ மோதலில் இலங்கையை உள்ளீர்த்தல், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியா ஆகியவற்றை இதற்காக முன்னெடுக்கும் செயற்பாடுகள் மற்றும் நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடிகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இந்த கலந்துரையாடலில் அவதானம் செலுத்தப்பட்டது.
தற்போது கடும் எதிர்ப்புக்களுக்கு உள்ளாகியுள்ள கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலம் தொடர்பில் இதன் போது கலந்துரையாடப்பட்டதோடு, இது தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் முன்னிலை சோசலிச கட்சி ஆகியவற்றுக்கிடையில் கொள்கை ரீதியான வேறுபாடுகள் காணப்பட்டாலும் , சில கருத்துக்கள் இணங்கக் கூடியவையாக உள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளமை இதன் போது கவனத்தில் கொள்ளப்பட்டது.
No comments:
Post a Comment