பிடியானை பிறப்பிக்கப்பட்ட நபரை கைது செய்ய சென்ற பொலிஸார் மீது தாக்குதல் - News View

About Us

About Us

Breaking

Monday, August 30, 2021

பிடியானை பிறப்பிக்கப்பட்ட நபரை கைது செய்ய சென்ற பொலிஸார் மீது தாக்குதல்

நீதிமன்றத்தினால் பிடியானை பிறப்பிக்கப்பட்ட நபர் ஒருவரை நேற்று ஞாயிற்றுக்கிழமை கைது செய்ய சென்ற பொலிஸார் இருவர் மீது, குறித்த பிடியானை பிறப்பிக்கப்பட்ட நபர் தாக்குதல் நடத்தியதால் அவ்விரண்டு பொலிஸாரும் வன்னாத்தவில்லு பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

புத்தளம் மாவட்டத்தின் வன்னாத்தவில்லு பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் இருவரே இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வன்னாத்தவில்லு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட 14ஆம் கட்டைப் பிரதேசத்தில் வைத்து இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள் இருவரும் சிறிய காயங்களுக்கு உள்ளான நிலையில் வன்னாத்தவில்லு பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, பொலிஸ் கான்ஸ்டபிள் இருவரையும் தாக்கியதாக கூறப்படும் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக வன்னாத்தவில்லு பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவித்த வன்னாத்தவில்லு பொலிஸார், இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

No comments:

Post a Comment