அனைத்து சுகாதாரத் துறை ஊழியர்களுக்கும் மூன்றாவது தடுப்பூசியை வழங்க நடவடிக்கை எடுப்பது அவசியம் : அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் வேண்டுகோள் - News View

Breaking

Tuesday, August 31, 2021

அனைத்து சுகாதாரத் துறை ஊழியர்களுக்கும் மூன்றாவது தடுப்பூசியை வழங்க நடவடிக்கை எடுப்பது அவசியம் : அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் வேண்டுகோள்

அனைத்து சுகாதாரத் துறை ஊழியர்களுக்கும் மூன்றாவது தடுப்பூசியை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

அது தொடர்பில் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தனவிற்கு கடித மூலம் கோரிக்கை விடுத்துள்ளது.

அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் டாக்டர் சமந்த ஆனந்த அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் ஆறு முக்கிய விடயங்களை முன்வைத்து சுகாதார அமைச்சின் தொற்று நோய் பிரிவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. அதற்கிணங்க நாட்டை மீண்டும் திறப்பதானால் கண்டிப்பாக அனைத்து சுகாதார பிரிவுகளும் பலப்படுத்தப்பட வேண்டும்.

சுகாதாரத் துறை ஊழியர்கள் 300 க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ள நிலையில் சிலர் மரணமடைந்தும் உள்ளனர்.

எந்தளவு ஆஸ்பத்திரிகளில் இருந்தாலும் நோயாளிகளை பராமரிப்பதற்கு ஊழியர்களின் பற்றாக்குறை நிலவுகிறது.

சுகாதாரத்துறை ஊழியர்களின் பிள்ளைகளும் மிகுந்த எச்சரிக்கை நிலையில் உள்ளனர். அதனைக் கவனத்திற் கொண்டு சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு மூன்றாவது தடுப்பூசியைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

No comments:

Post a Comment