இலங்கையில் திங்கட்கிழமை முதல் இரவில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு : அத்தியாவசிய சேவைகளுக்கு இடையூறு கிடையாது - News View

Breaking

Sunday, August 15, 2021

இலங்கையில் திங்கட்கிழமை முதல் இரவில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு : அத்தியாவசிய சேவைகளுக்கு இடையூறு கிடையாது

நாளை (16) திங்கட்கிழமை முதல் மறு அறிவித்தல் வரை, தினமும் இரவு 10.00 மணி முதல் மறுநாள் அதிகாலை 4.00 மணி வரை நாடளாவிய ரீதியில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படுவதாக, கொவிட்-19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் பிரதானி, இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.

ஆயினும் ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள காலப்பகுதியில், அத்தியாவசிய சேவைகளை நடைமுறைப்படுத்துவதில் எவ்வித இடையூறும் இல்லை எனவும், இக்காலப்பகுதியில் அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் போக்குவரத்திற்கு அனுமதி வழங்கப்படுமென, இராணுவத் தளபதி அறிவித்துள்ளார்.

No comments:

Post a Comment