(எம்.ஆர்.எம்.வசீம்)
நாட்டில் உயர் கல்வி தொடர்பில் ஏற்பட்டிருக்கும் பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடி பொதுவான இணக்கப்பாடொன்று ஏற்படுத்திக் கொள்ளவேண்டும். அதற்கு பாராளுமன்ற தெரிவுக்குழுவொன்று நியமிக்கப்பட வேண்டும் என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.
வர்த்தக அமைச்சில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், நாட்டில் உயர் கல்வி தொடர்பில் ஏற்பட்டு வரும் பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடி பொதுவான பரிந்துரைகளை பெற்றுக் கொள்வதற்காக பாராளுமன்ற தெரிவுக்குழுவொன்று அமைக்கப்பட வேண்டும்.
பாராளுமன்ற தெரிவுக்குழுவொன்றின் மூலம் ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகள் என அனைத்து தரப்பினரதும் கருத்துக்களை பெற்றுக் கொள்ள முடியும். அதுவே மிகவும் சிறந்த முறையாகும் என்பது எனது தனிப்பட்ட நிலைப்பாடாகும், எனக் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment