ஜப்பான் கொரோனா தொற்றுக்கு எதிரான அவசர நிலையை மேலும் 8 வட்டாரங்களுக்கு விரிவுபடுத்தியுள்ளது.
டோக்கியோ, ஒசாக்கா உள்ளிட்ட 13 வட்டாரங்களில் ஏற்கனவே அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. ஹோக்காய்டோ, ஹிரோஷிமா உள்ளிட்ட மேலும் 8 வட்டாரங்களில் நாளை ஆரம்பமாகும் அவசர நிலை, அடுத்த மாதம் 12ஆம் திகதிவரை நீடிக்கும்.
அதன் மூலம், ஜப்பானின் 70 வீதமான பகுதிகளில் நோய்ப்பரவலினால் ஏதாவது ஒருவகை அவசரநிலை நடப்பில் இருக்கும்.
நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின்போது அதுபற்றிப் பிரதமர் யோஷிஹிடே சுகா அறிவிப்பை வெளியிட்டார்.
டோக்கியோவில், பரா ஒலிம்பிக் போட்டிகள் கடந்த செவ்வாய்க்கிழமை ஆரம்பித்த வேளையில் நெருக்கடி நிலையை விரிவுபடுத்துவது பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.
அந்தப் போட்டிகளில் பார்வையாளர்கள் கலந்துகொள்வதற்கு அனுமதியில்லை.
ஜப்பானில் கடந்த செவ்வாய்க்கிழமை 21,500 புதிய நோய்த் தொற்று சம்பவங்கள் பதிவாகி இருப்பதோடு மேலும் 42 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் ஒட்டுமொத்த தொற்றுச் சம்பவங்கள் 1.34 மில்லியனாக அதிகரித்திருப்பதோடு 15,700க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்.
No comments:
Post a Comment