மவுசாகலை நீர்த் தேக்கத்தின் மூன்று வான் கதவுகள் இன்று (03) திறக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையப் பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த நீர்த் தேக்கத்தில் திருத்த வேலைகள் இடம்பெறவுள்ளதால் தொடர்ச்சியாக 14 நாட்களுக்கு இவ்வாறு வான் கதவுகள் அவ்வப்போது திறந்து மூடப்படும் எனவும் நிலையம் தெரிவித்துள்ளது.
இந்நாட்களில் மேற்படி நீர்த் தேக்கத்திற்குட்பட்ட தாழ்நிலப் பகுதிகளிலும் வசிக்கும் மக்களை, அவதானத்துடன் இருக்குமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக கெசல்கமுவ ஓய மற்றும் களனி கங்கையின் நீர் மட்டம் உயரலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
(நோட்டன் பிரிட்ஜ் நிருபர் - எம். கிருஸ்ணா)
No comments:
Post a Comment