எவ்வித அறிகுறிகளுமற்ற சாதரண (லேசான) கோவிட்-19 நோயாளிகளுக்கு மருத்துவ அமைப்பாக வீடு : நீங்கள் அறிந்திருக்க வேண்டிய விடயங்கள் என்ன - News View

About Us

About Us

Breaking

Friday, August 20, 2021

எவ்வித அறிகுறிகளுமற்ற சாதரண (லேசான) கோவிட்-19 நோயாளிகளுக்கு மருத்துவ அமைப்பாக வீடு : நீங்கள் அறிந்திருக்க வேண்டிய விடயங்கள் என்ன

(அனுப்புனர் அனஸ் அப்பாஸ்)

அறிமுகம்
பொதுவாக பெரும்பாலான கொவிட்-19 தொற்று ஏற்பட்ட நோயாளிகள் சாதாரண பாதிப்பற்ற நோய் நிலைமையையே உருவாக்குவதோடு அவ்வாறான நோய்நிலைமைகள் முதன்மை பராமரிப்பு மட்டத்திலேயே நிர்வகிக்கப்படுகின்றன. மேலும் தொற்று பரவும் காலங்களில் முதன்மை பராமரிப்பு சேவைகளுக்கான தேவை அதிகரிக்கின்றது. பாதிப்பற்ற COVID-19 தொற்று ஏற்பட்ட நோயாளிகளை நிர்வகித்தல் அல்லது மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட நோயாளிகளை நோய் தொற்றிலிருந்து மீட்டெடுத்தல், நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பினை நிர்வகிக்கும் (எழுச்சி) திறனை அதிகரிப்பதற்கான உத்திகளைக் கண்டறிதல், தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள்(PPE) மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களின் பங்குகளினை நிர்வகித்தல் மற்றும் பராமரித்தல், அத்தியாவசிய சேவைகளை பராமரித்தல் மற்றும் அதே நேரத்தில் பாதிப்படையக்கூடிய குழுக்களின் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கு சரியான நேரத்தில் மாற்றங்கள் மேற்கொள்வதை உறுதி செய்தல் போன்ற நடவடிக்கைகளில் முதன்மை பராமரிப்பின் பங்கை ஆதரிக்க தேசிய மற்றும் துணை தேசிய ரீதியிலான சுகாதார கொள்கை வகுப்பாளர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இலங்கையில் அதிகரித்து வரும் COVID-19 இன் விரைவான பரவலின் காரணமாக சுகாதார அமைப்புகளினால் PCR பொசிட்டிவான COVID-19 நோயாளிகளுக்கு மருத்துவமனை பராமரிப்பில் சிகிச்சை வழங்குவது கடினமாக மாறியுள்ளது; இதன் காரணமாக எவ்வித அறிகுறிகளுமற்ற பாதிப்பற்ற COVID -19 நோயாளிகளுக்கு மருத்துவ பராமரிப்பினை வழங்கும் ஏற்பாட்டிற்கான ஒரு அமைப்பாக வீடானது உண்மையில் சாத்தியமானதாகவோ அல்லது அவசியமானதாகவோ இருக்கலாம். இதன் காரணமாக, துல்லியமாக மருத்துவ ரீதியாக பரிசோதிக்கப்பட்ட மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட நோயாளிகளுக்கு வீட்டை அடிப்படையாக கொண்ட பராமரிப்பினை வழங்குவதற்கான முன்கூட்டியே திட்டமிடல் முக்கியமானதாகும்.

உலக சுகாதார தாபனத்தின்(WHO) படி, COVID-19 தொற்றானது கடுமையற்ற தொற்று, நடுத்தரமான தொற்று மற்றும் கடுமையான தொற்று என மூன்று வகையாக வகைப்படுத்தப்பட்டுள்ளது (படம் 1). இவ்வகையில் எவ்வித அறிகுறிகளுமற்ற, கடுமையற்ற தொற்றுடையவர்கள் என வகைப்படுத்தப்பட்டுள்ள COIVID-19 நோயாளிகள் பிறநபர்களிடமிருந்து குறிப்பிட்ட வகையில் தனிமைப்படுத்தப்பட்டால், அந்நோயாளிகளினால் வீட்டிலேயே தங்க முடியும். எனினும் நீங்கள் கடுமையற்ற COVID-19 தொற்றுடன், அறிகுறிகளுக்கு உட்பட்டு இருந்தால், நீங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவீர்கள் என்பதையும் இது குறிக்கிறது.
COVID-19 நோயாளிகளை வீட்டில் பராமரிப்பதற்கான தீர்மானம்
இம் முடிவானது நோயாளி அல்லது அவரின் குடும்பத்தினரால் மேற்கொள்ளவோ, செய்யவோ முடியாது. மாறாக நோயாளியின் கடந்த கால மற்றும் தற்போதைய சுகாதார நிலைகளுக்கு மேலதிகமாக நோயாளியின் வீட்டு உள்கட்டமைப்பை( சூழலை) அறிந்த ஒரு குடும்ப மருத்துவர் மற்றும் பொது சுகாதார சேவையாளரை உள்ளடக்கிய ஒரு சுகாதாரக் குழுவால் மேற்கொள்ளப்படும் மருத்துவ பரிசோதனைக்குப் பிறகே இத் தீர்மானம் எடுக்கப்பட வேண்டும்.

வயோதிபர் அல்லது ஓர் சிறு குழந்தைக்கு COIVD-19 தொற்றானது உறுதி செய்யப்படும் சந்தர்ப்பத்தில் நோயாளியின் பராமரிப்பில் (சுகாதார வசதிகள்) சாத்தியமற்ற சூழ்நிலையில் அல்லது பாதுகாப்பற்ற நிலையில் வீட்டு பராமரிப்பானது முக்கியம் பெறுகின்றது. அத்துடன் வீட்டு பராமரிப்பில் நோய் தொற்றுடைய நோயாளி ஒருவர் சிகிச்சை பெறும் போது வீட்டில் உள்ள ஏனையவர்களுக்கு வைரஸ் தொற்றானது பரவும் அபாயம் அதிகரிக்கின்றது என்பதையும் புரிந்து கொள்ளல் வேண்டும். எனினும், நோயாளிகள் வீட்டில் தனிமைப்படுத்தப்படுவதும் , கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்குவதற்காக, ஒரு மருத்துவ அமைப்பாக வீட்டை பயன்படுத்துவதும் வைரஸின் பரவல் சங்கிலியை உடைப்பதில் முக்கிய பங்களிப்பினை மேற்கொள்ளும்.

வீட்டு பராமரிப்பானது 60 வயதிற்குட்பட்ட நபர்களுக்கு மிகவும் பொருத்தமானதாக கருதப்படுவதுடன் , புகைபிடித்தலை தவிர்த்தல், மற்றும் இருதய நோய்கள், நீரிழிவு நோய், நாள்பட்ட நுரையீரல் நோய், புற்றுநோய், நாள்பட்ட சிறுநீரக நோய் போன்ற எவ்வித நோய்களும் இல்லாமல் இருத்தல் வேண்டும்.

நோய் தொற்றினால் பாதிக்கப்பட்ட நபரை வீட்டில் தனிமைப்படுத்தி பராமரிப்பது என்ற தீர்மானமானது பின்வரும் 3 காரணிகளில் தங்கியுள்ளது.

1. COVID-19 நோயாளியின் மருத்துவ மதிப்பீடு

2. வீட்டு அமைப்பின் மதிப்பீடு (தயவுசெய்து பெட்டி 1 ஐப் பார்க்கவும்). இலங்கையின் சூழலின் அடிப்படையில், கோவிட் -19 தொற்று நிலையில் பராமரிப்பு நடவடிக்கைக்காக மருத்துவ அமைப்பாகக் வீட்டினை கருதும் போது , பின்வருவனவற்றினை கருத்தில் கொள்ள வேண்டும்.

2.1. குறைந்தபட்சம் இரண்டு தனிப்பட்ட அறைகள், போதுமான இயற்கை காற்றோட்டம் மற்றும் இரண்டு கழிப்பறைகள் கொண்ட இடமாக இருத்தல்.

2.2. வீட்டமைவானது நீர் வழிந்தோடக்கூடிய வசதியுடையதாக இருத்தல் வேண்டும்.

2.3. பாதிக்கப்பட்ட நோயாளி / குடும்பத்தினர் வழக்கமாக மற்றும் அவசரகாலத்தில் சுகாதார வழங்குநர்களைத் தொடர்பு கொள்ள தகவல் தொடர்பு வசதிகள் இருத்தல் வேண்டும்.

பெட்டி 1 - கோவிட்-19 பராமரிப்பிற்காக மருத்துவ அமைப்பாக வீட்டினை அமைக்கும் போது கருத்திற்கொள்ள வேண்டிய விடயங்கள்

COVID-19 தொற்றுடையவர் தனியாக வசிப்பவர்களா? அப்படியானால், அவர்களுக்கு எவை ஆதரவாக அமைகின்றன ? இல்லையென்றால், அவர்களுடன் வீட்டில் யார் வசிக்கிறார்கள்?

COVID-19 உள்ள நபரும் அவர்களது குடும்பமும் எவ்வாறு வாழ்கிறார்கள்? பரிந்துரைகளைச் செயல்படுத்துவது எவ்வளவு சாத்தியமானது மற்றும் நடைமுறைக்குரியது? என்ன மாற்று வழிகள் உள்ளன?

பெரியவர்கள், வயதானவர்கள் அல்லது குழந்தைகளுக்கான கவனிப்பு பொறுப்புகள் தொடர்பான தேவைகள் என்ன? வீட்டு ஏனைய உறுப்பினர்களின் தேவைகள் என்ன?

வீட்டில் COVID-19 தொற்றுள்ள நபரை ஆதரிக்க ஒரு பராமரிப்பாளரை அடையாளம் காண்பது எந்தளவு சாத்தியமானது?

வீட்டு உறுப்பினர்கள் COVID-19 தொற்று தொடர்பாக மற்றும் வீட்டில் பரவுவதைத் தடுப்பது பற்றி எவ்வாறானவற்றை அறிவார்கள்? மற்றும் தேவையேற்பட்டால் COVID-19 உடைய நபரைப் பராமரிப்பது தொடர்பான ஆதரவு அல்லது தகவல்களை எங்கிருந்து பெற்றுக்கொள்ளலாம் என்பதை அறிவார்களா?

COVID-19 தொற்று ஏற்பட்ட நபர் அல்லது அவர்களது வீட்டு உறுப்பினர்கள் வீட்டிலேயே இதனை சமாளிக்க முடியும் என்று என்ன நினைக்கிறார்கள்?

குடும்ப உறுப்பினர்கள் மருத்துவ உதவியை எந்நேரத்தில் நாட வேண்டும் என அறிவார்களா? மேலும் மருத்துவ உதவிக்கு நாட அவர்களுக்கு வழி இருக்கிறதா?

3. வீட்டிலுள்ள நபரின் மருத்துவ மதிப்பீட்டினை கண்காணிக்கும் திறன்

வீட்டு பராமரிப்பு பெறும் கொவிட்-19 தொற்றுக்குள்ளான நோயாளியில் கண்காணிக்க வேண்டிய விடயங்கள்

நோயாளி மற்றும் பராமரிப்பாளர்கள் நோயின் அடையாளங்கள் மற்றும் அறிகுறிகள் தொடர்பாக அறிவுறுத்தப்பட வேண்டும், இதன்போதே மருத்துவ கவனிப்பு தேவைப்படும் போதும் தொற்றின் காரணமாக உடல்நிலை மோசமடையும் போதும் அது குறித்து அவதானமாக இருக்க முடியும்.

வீட்டு அமைப்பில் கண்காணிக்க வேண்டிய மிக முக்கியமான அளவுருக்களாக காய்ச்சல், சுவாசிப்பதில் சிரமம், வேகமான அல்லது ஆழமற்ற சுவாசம், நீல உதடுகள் அல்லது முகம், மார்பு வலி அல்லது அழுத்தம், எழுந்திருக்க இயலாமை மற்றும் திரவங்களை குடிக்கவோ அல்லது வைத்திருக்கவோ இயலாமை போன்றவை காணப்படுகின்றன. இவற்றைத் தவிர முணுமுணுப்பு மற்றும் தாய்ப்பால் கொடுக்க இயலாமையையும் கருத்தில் கொள்ள வேண்டும். (உங்கள் கவனத்திற்கு: தயவுசெய்து இந்த பட்டியல் ஒரு முழுமையான பட்டியல் அல்ல என்பதால், உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் காணப்பட்டால், உடனடியாக சுகாதாரக் குழுவைத் தொடர்பு கொள்ளுங்கள்)

‘ஹோம் பல்ஸ்’ ஆக்சிமெட்ரி என்பது இரத்தத்தில் ஆக்ஸிஜன் செறிவூட்டலை மதிப்பிடுவதற்கான ஒரு பாதுகாப்பான, தீவிரமல்லாத ஒரு வழியாகும், மேலும் இம்முறையானது முன்கூட்டியே கடுமையற்ற அல்லது நடுத்தரமான COVID-19 தொற்றுடைய நோயாளிகளிடத்தே குறைந்த ஆக்ஸிஜன் அளவுகளை முன்கூட்டியே அறிய உதவுவதுடன் அல்லது நோயாளியிற்கு மூச்சுத் திணறல் தோன்றாத சந்தர்ப்பத்தில் அவற்றின் ஆக்சிஜன் அளவு எதிர்பார்த்ததை விட குறைவாக உள்ளது (சைலண்ட் ஹைபோக்ஸியா). ஹோம் பல்ஸ்(துடிப்பு ) ஆக்சிமெட்ரி, மருத்துவ மதிப்பீடு மற்றும் ஆக்ஸிஜன் சிகிச்சை அல்லது மருத்துவமனையில் சேர்க்கப்பட வேண்டிய நபர்களை கடுமையான அறிகுறிகள் அவர்களிடத்தே தோன்றுவதற்கு முன்பே அடையாளம் காட்டுகின்றன.

கடுமையற்ற நோய் அறிகுறியற்ற COVID-19 தொற்றுக்குள்ளான நோயாளிகளுக்கு வீட்டு பராமரிப்பு பரிந்துரைக்கப்படும் சந்தர்ப்பத்தில், குறைந்தபட்சம் ஒரு விரல் துடிப்பு ஆக்சிமீட்டரை வைத்திருத்தல் அல்லது அணுகல் கட்டாயம் என்பது ஆசிரியரின் கருத்தாகும்.

COVID-19 தொற்றுடைய ஒருவரை வீட்டில் வைத்து பராமரிக்கும் போது, வீட்டில் உள்ள ஏனைய உறுப்பினர்கள் நோய் தொற்றினால் பாதிப்படையாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

வழங்கப்பட்ட உபகரணங்களை பயன்படுத்துவதற்கும், ‘சிவப்பு கொடி’ அறிகுறிகளை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், மேலும் அறிவுறுத்தல்களுக்கு முதன்மை சுகாதாரப் பாதுகாப்பு வழங்குநரைத் தொடர்புகொள்வதற்கும் நோயாளி மற்றும் பராமரிப்பாளர்களுக்கு ஒரு எளிய மற்றும் குறுகிய நோக்குநிலை திட்ட நிகழ்ச்சியை (orientation)வழங்க வேண்டும் என்பது மிகவும் பரிந்துரைக்கப்படுகிறது.

COVID-19 தொற்றானது வீட்டிலுள்ள ஏனையவர்களுக்கு பரவாமல் தடுப்பதற்கான பல முன்னெச்சரிக்கைகள் காணப்படுகின்றன

நோய்வாய்ப்பட்ட நபர் ஒரு தனி அறையில் தங்குதல் வேண்டும். இச் செயற்பாடானது சாத்தியமில்லாத சந்தர்ப்பத்தில், அவர்களிடமிருந்து குறைந்தபட்சம் 1 மீட்டர் தூரத்தை வைத்திருத்தல் வேண்டும். அத்துடன் நோய்வாய்ப்பட்ட நபரும் அதே அறையில் வேறு எவரும் காணப்பட்டால் அந்நபரும் மருத்துவ முகமூடியை அணிதல் வேண்டும்.

நோய்வாய்ப்பட்ட நபர் இருக்கும் அறையானது நல்ல காற்றோட்டத்தை வழங்க கூடியதாக இருத்தல் வேண்டும், அத்துடன் முடிந்தளவு பாதுகாப்பான வகையில் ஜன்னல்களைத் திறத்தல் வேண்டும்.

நோய்வாய்ப்பட்ட நபர் முடிந்தவரை மருத்துவ முகமூடியை அணிய வேண்டும், குறிப்பாக அறையில் தனியாக இல்லாதபோதும், ​​மற்றவர்களிடமிருந்து குறைந்தபட்சம் 1 மீட்டர் தூரத்தை பராமரிக்க முடியாதபோதும் குறிப்பிடத்தக்கதாகும். வீட்டை சுற்றி நோயாளியின் நடமாட்டத்தை கட்டுப்படுத்துங்கள். ( சமையலறை, குளியலறை) நன்கு காற்றோட்டமாக இருப்பதை உறுதிசெய்க.

விருந்தினர்ளை வீட்டில் அனுமதிக்கக்கூடாது.

முடிந்தால் அடிப்படை நிபந்தனைகள் இல்லாத ஒருவருக்கு பராமரிப்பாளர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துங்கள்.

பராமரிப்பாளர்களும் வீட்டு உறுப்பினர்களும் நோய்வாய்ப்பட்ட நபருடன் ஒரே அறையில் இருக்கும்போது மருத்துவ முகமூடியை அணிதல் வேண்டும், பயன்பாட்டின் போது முகமூடியையோ முகத்தையோ தொடக்கூடாது, அறையை விட்டு வெளியேறிய பின் அம்முகமூடியை தவிர்த்தல் வேண்டும், பின்னர் கைகளை நன்கு கழுவுதல் வேண்டும்.

நோய்வாய்ப்பட்ட நபருக்கு பிரத்தியேக உணவுகள்,பாத்திரங்கள், சாப்பிடும் பாத்திரங்கள், துடைக்கும் துணி மற்றும் படுக்கை துணி என்பன இருத்தல் வேண்டும். அவை பகிர்ந்துக்கொள்ளக் கூடாது.

நோய்வாய்ப்பட்ட நபரால் அடிக்கடி ஸ்பரிசம் செய்யப்பட்ட மேற்பரப்புக்கள் குறைந்தது தினமும் சுத்தம் செய்து கிருமி நீக்கம் செய்யப்பட வேண்டும்.

வீட்டிலுள்ள ஒவ்வொருவரும் தவறாமல் சோப் மற்றும் தண்ணீர் கொண்டு கைகளைக் கழுவுதல் வேண்டும், குறிப்பாக:

- இருமல் அல்லது தும்மலுக்குப் பிறகு,

- நீங்கள் சமைப்பதற்கு முன்பும் பின்பும்

- உணவு உண்பதற்கு முன்

- கழிப்பறையைப் பயன்படுத்திய பின்னும், நோய்வாய்ப்பட்ட நபரைப் பராமரிப்பதற்கு முன்பும் பின்பும்

- கைகள் பார்க்கும் போது அழுக்காக இருக்கும்போது

இருமும் போதும் அல்லது தும்மல் ஏற்படும் போதும் முழங்கை அல்லது பயன்படுத்திய பின் வீசப்படும் திசுக்களால் மூடுதல் வேண்டும், அத்துடன் பயன்படுத்தப்பட்ட உடனேயே அவ்வாறான விடயங்கள் அப்புறப்படுத்தப்படுதல் வேண்டும்.

நோய்வாய்ப்பட்ட நபரிடமிருந்து வரும் கழிவுகள் மற்றும் அகற்றப்படும் விடயங்கள் வெளியில் அகற்றுவதற்கு முன்னர் வலுவான மூடிய பைகளில் அடைக்கப்படல் வேண்டும்.

(நோயாளி மற்றும் பராமரிப்பாளர்கள்) தொடர்ந்து முகமூடி வழங்குவதற்கு ஊக்குவிக்கப்படுதல் வேண்டும்.

COVID-19 தொற்றுடைய நபர்கள் வீட்டிலும் தனிமையிலும் எவ்வளவு காலம் இருக்க வேண்டும்?

வீட்டிலேயே பராமரிக்கப்படும் COVID-19 தொற்றூடையவர்கள் மற்றவர்களுக்கு வைரஸ் பரவ முடியாத நிலையை அடையும் வரை தனிமையில் இருத்தல் வேண்டும்:

நோய் அறிகுறிகள் உள்ளவர்கள் அறிகுறிகளை உருவாகிய முதல் நாளுக்குப் பிறகு குறைந்தபட்சம் 10 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டிருத்தல் வேண்டும், அத்துடன் மேலும் 3 நாட்கள் அறிகுறிகளின் முடிவில் இருத்தல் வேண்டும் -

அறிகுறிகள் இல்லாதவர்கள் தொற்று ஏற்பட்டதன் பின் சோதனைக்குப் பிறகு குறைந்தபட்சம் 10 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுதல் வேண்டும்.

முடிவு

COVID-19 க்கான உலகளாவிய வெளிப்பாட்டிற்கும் முதன்மை பராமரிப்பு ஒரு முக்கிய அடித்தளமாகும். கொவிட்-19 மருத்துவ பதில்களில் முதன்மை பராமரிப்பு முக்கிய பங்கு வகிக்கிறது: நோய் சாத்தியமான COVID-19 நோயாளிகளை அடையாளம் கண்டு பரிசோதனை செய்தல், முன்கூட்டியே நோயறிதல், பாதிக்கப்படக்கூடியவர்களுக்கு வைரஸ் குறித்த கவலையை சமாளிக்க உதவுதல் மற்றும் மருத்துவமனை சேவைகளுக்கான தேவையை குறைத்தல். மருந்துகள் அல்லாத தலையீடுகள் உள்ளிட்ட பாரிய கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை நகரங்கள் விதித்ததாலும், பெரிய மருத்துவமனைகள் பரவலின் காரணமாக தங்கள் வெளிநோயாளர் துறைகளை மூடியதாலும், முதன்மை பராமரிப்பின் பங்கு பெருகிய முறையில் முக்கியமானது.

ஒரு வலுவான முதன்மை பராமரிப்பு முறையால் ஆதரிக்கப்படும் சமூகங்களுக்குள் COVID-19 நோயாளர்களுக்கான வீட்டு பராமரிப்பின் பங்களிப்பு அதிகரித்து வருகிறது, இது சுகாதாரப் பாதுகாப்புத் தொழிலாளர்கள் மற்றும் சமூகங்களுக்கு இடையிலான நம்பிக்கையை பலப்படுத்துகிறது.

SARS-COV-2 வைரஸ் தனது வேலையைச் செய்து வருகிறது. வைரஸ் பரவாமல் தடுக்க தனிநபர்கள், குடும்பங்கள் மற்றும் சமூகங்கள் என்ற வகையில் நாங்கள் எங்கள் வேலையைச் செய்கிறோமா? நாம் அனைவரும் பாதுகாப்பாக இருக்கும் வரை நாம் யாரும் பாதுகாப்பாக இருக்க மாட்டோம்.

கடுமையற்ற, அறிகுறியற்ற COVID-19 நோயாளிகளுக்கு வீட்டுப் பராமரிப்பை அனுமதிப்பதன் மூலம் அரசாங்கம் / சுகாதார அதிகாரிகள் இலங்கை மக்களுக்கு நம்பிக்கையை வழங்குகின்றனர், மேலும் இலங்கையில் COVID-19 நிர்வாகத்தின் மருத்துவ பராமரிப்பு செயல்முறையின் ஒரு பகுதியாக இருப்பதற்கான பொறுப்பை எங்களுக்கு வழங்குகிறார்கள். அரசாங்கம் / சுகாதார அதிகாரிகள் அவர்கள் நம்மீது வைத்திருக்கும் நம்பிக்கையை தவறாகப் பயன்படுத்துதல், கையாளுதல் மற்றும் துஷ்பிரயோகம் செய்வதன் மூலம் நாம் ஏமாற்றமடைய வேண்டாம். COVID-19 நோயாளிகளினை வீட்டு பராமரிப்பை மேற்கொள்ளும் சூழலில், இலங்கை மக்கள் நாங்கள் அதனை பொறுப்பேற்றால் அதை முறையாக வழங்குவோம் என்பதை அவர்களுக்குக் காண்பிப்போம்.

Dr Ruvaiz Haniffa
MBBS DFM PgDip MSc MD FCGP MRCGP
Family Physician
Head
Dept Family Medicine
Faculty of Medicine
University of Colombo
Past President Sri Lanka Medical Association

Tamil Translation by 
Haseena Moujood
B. Sc (Hons) in Information Technology &
Management (R)
University of Moratuwa.

Reference
Home care for patients with suspected or confirmed COVID-19 and management of their contacts. Interim guidance 12th August 2020. Updated 2nd March 2021.

Role of primary care in the COVID-19 response. Interim guidance. Revised and republished as of April 9th, 2021 (Originally published 26th March 2020).

No comments:

Post a Comment