ஜப்பானின் முன்னணி நிறுவனத்தின் இணைய செயற்பாடுகளை ஹேக் செய்து 100 மில்லியன் டொலர்கள் திருட்டு - News View

About Us

About Us

Breaking

Friday, August 20, 2021

ஜப்பானின் முன்னணி நிறுவனத்தின் இணைய செயற்பாடுகளை ஹேக் செய்து 100 மில்லியன் டொலர்கள் திருட்டு

ஜப்பானின் முன்னணி கிரிப்டோகரன்சி பரிவர்த்தனை நிறுவனமான “லிக்விட்“ நிறுவனத்தின் இணைய செயற்பாடுகளை ஹேக் செய்து சுமார் 100 மில்லியன் அமெரிக்க டொலர்கள் திருடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் குறித்த கிரிப்டோகரன்சி பரிவர்த்தனை நிறுவனத்தின் இணையவழி பண பரிவர்த்தனை பங்குதாரர்களுடன் சமரச பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளதாக குறித்த நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

சமீபத்திய நாட்களில் மேற்கொள்ளப்பட்ட இரண்டாவது மிகப் பெரும் திருட்டுச் சம்பவம் இது என குறித்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

கிரிப்டோகரன்ஸி பயனர்களுக்கு எளிதாக தமது செயற்பாடுகளை மேற்கொள்வதற்காக“சூடான” அல்லது ஒன்லைன் பண பரிவர்த்தனைகளை செயற்படுத்தி வருகின்றது.

”குளிர்” ஓப்லைன் பணப் பரிவர்த்தனைகளின் போது ஏற்படக்கூடிய சிக்கல்களை இல்லாமல் செய்வதற்காவே குறித்த ஒன்லைன் முறையினை செயற்படுத்தியதாக அந்த நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

அத்தோடு “பிளக்செயின் பகுப்பாய்வு” நிறுவனமான எலிப்டிக், நறுவனம் அதன் பகுப்பாய்வில் சுமார் 97 மில்லியன் அமெரிக்க டொலர் கிரிப்டோகரன்ஸிகள் திருடப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.

இதையடுத்து தற்போது வரை ஹேக்கர்களால், திருடப்பட்ட கிரிப்டோகரன்ஸிகளின் இயக்கத்தைக் கண்டறியவும், சொத்துக்களை முடக்கவும், மீட்கவும் பிற பரிமாற்றங்களுடன் இணைந்து தாம் செயற்பட்டு வருவதாக லிக்விட் நிறுவனம் தெரவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment