(எம்.மனோசித்ரா)
நாட்டில் கொவிட் வைரஸ் தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை கடந்த வாரம் முதல் சடுதியான அதிகரிப்பை காண்பிக்கிறது.
கடந்த வாரத்தில் மாத்திரம் 11529 கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதோடு, 314 மரணங்களும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதிப்படுத்தப்பட்டன.
தற்போதுள்ள நிலைமை அபாயமானது என்றும், எனவே சகலரதும் நலன்கருதி குறிப்பிட்ட வயதெல்லையிலுள்ளோர் நிச்சயம் தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் கலாநிதி சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.
அபாயமுடைய பிரதேசங்கள்
இவ்வாறு நாளாந்தம் தொற்றாளர் எண்ணிக்கை அதிகரித்து வருகின்ற நிலையில் கொவிட் பரவலில் அதிக அபாயமுடைய பிரதேசங்கள் சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.
கடந்த 14 நாட்களுக்குள் ஒவ்வொரு சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளிலும் இனங்காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு இவ்வாறு அபாயமுடைய பகுதிகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.
அதற்கமைய கொழும்பில் 19 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளும், கம்பஹாவில் 15, களுத்துறையில் 15, குருணாகலில் 23, புத்தளத்தில் 13, கண்டியில் 23, மாத்தளையில் 12, நுவரெலியாவில் 13, கேகாலையில் 11, இரத்தினபுரியில் 17, யாழ்ப்பாணத்தில் 14, கிளிநொச்சியில் 4, மன்னாரில் 4, முல்லைத்தீவில் 5, வவுனியாவில் 3, அம்பாறையில் 7, மட்டக்களப்பில் 13, கல்முனையில் 13, திருகோணமலையில் 8, அநுராதபுரத்தில் 19, பொலன்னறுவையில் 8, பதுளையில் 16, மொனராகலையில் 11, காலியில் 20, அம்பாந்தோட்டையில் 12, மாத்தறையில் 17 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளும் அபாயமுடையவையாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment