'இட்டுகம' நிதியத்திற்கு Daraz நிறுவனம் 2 மில்லியன் ரூபா மற்றும் PPE கருவிகளை நன்கொடையாக வழங்கியது - News View

Breaking

Post Top Ad

Thursday, July 22, 2021

'இட்டுகம' நிதியத்திற்கு Daraz நிறுவனம் 2 மில்லியன் ரூபா மற்றும் PPE கருவிகளை நன்கொடையாக வழங்கியது

'இட்டுகம' கொவிட்-19 சுகாதார பராமரிப்பு மற்றும் சமூக பாதுகாப்பு நிதிக்கு Daraz நிறுவனம் 2 மில்லியன் ரூபா மற்றும் PPE கருவிகளை நன்கொடையாக வழங்கியமை தற்போதைய கொவிட்-19 தொற்றுப்பரம்பலுக்கு எதிராக விடாமுயற்சியுடன் Daraz நிறுவனம் போராடுவதை எடுத்துக் காட்டியுள்ளது.

நன்கொடையினை, 2021 ஜுலை 19 ஆம் திகதி அலரி மாளிகையில் வைத்து இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பம், தொழில்முயற்சி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் நாமல் ராஜபக்ஷ மற்றும் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சர் ரொஷான் ரணசிங்ஹவின் முன்னிலையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டது.

Daraz நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் ரக்கில் பெர்ணன்டோ, சிரேஷ்ட நிர்வாக அதிகாரி தர்ஷிக்கா அத்தநாயக்க மற்றும் நிர்வாகம் மற்றும் கொள்முதல் தலைவர் மலித் ரணதேவ ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துக்கொண்டனர்.

கொவிட்-19 பரவுதலை தடுப்பதற்கு ஆதரவு வழங்கும் முகமாக ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷவினால் சுகாதார பராமரிப்பு மற்றும் சமூக பாதுகாப்பு நிதிக்கு நிதி திரட்டும் முயற்சியே இட்டுகம செயற்திட்டமாகும்.

ஆரம்பத்தில் ஜனாதிபதி நிதியில் இருந்து ரூ. 100 மில்லியனைக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டதே இச்செயற்திட்டமாகும். இந்நிதியானது சுகாதாரத் துறையில் உள்ளவர்கள் மற்றும் கொவிட்-19 இனால் பாதிப்புக்குள்ளாவனவர்களுக்கு உதவிகளை வழங்கும் ஏனைய அத்தியாவசிய சேவை வழங்குனர்கள் ஆகியோருக்கு பாதுகாப்பினை வழங்குவதை நோக்காக கொண்டுள்ளது.

இது இலங்கையில் எதிர்காலத்தில் சுகாதார அவசர நிலைமைகளுக்கு தயார்ப்படுத்தல் மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்தல் போன்றவற்றை மேம்படுத்துவதற்காக தொடர்ச்சியான ஆதரவினை வழங்கும்.

Daraz நிறுவனம் கொவிட்-19 தொற்றுப்பரம்பல் தொடங்கியதிலிருந்து Daraz உயசநள இன் கீழ் கூட்டு சமூக பொறுப்புணர்வு முயற்சிகளின் தொடர் நடவடிக்கைகள் ஊடாக சமூகத்திற்கு ஆதரவினை வழங்கும் தனது பங்கினை திறம்பட வழங்கியுள்ளது. இலங்கை அரசாங்கத்திற்கு உதவுவதன் மூலம் மேலும் தனது பங்கினை தொடர்ச்சியாக வழங்கும் எனத் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad