றிசாத் எம்.பியை விடுதலை செய்யக்கோரி கல்முனையில் துஆ பிராத்தனை - News View

Breaking

Post Top Ad

Tuesday, July 20, 2021

றிசாத் எம்.பியை விடுதலை செய்யக்கோரி கல்முனையில் துஆ பிராத்தனை

நூருள் ஹுதா உமர்

முன்னாள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவருமான பாராளுமன்ற உறுப்பினர் றிசாத் பதியுதீன் சுகம் பெறவும் விரைவில் விடுதலை பெற்று வீடு திரும்பவும் கோரி இறைவனிடம் பிரார்த்தனை செய்யும் நிகழ்வு அகில இலங்கை மக்கள் காங்கிரசின் கல்முனை மாநகராட்சி உறுப்பினர் எம்.எச்.எம். அப்துல் மனாபின் ஏற்பட்டில் அக்கட்சியின் தேசிய கொள்கை பரப்பு செயலாளரும், முன்னால் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான கே.எம். அப்துல் றஸாக் தலைமையில் கல்முனை பட்டின ஜும்மா பள்ளிவாசலில் நடைபெற்றது.

கடந்த பல மாதங்களாக சிறையில் அடைக்கப்பட்திருக்கும் முன்னாள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவருமான பாராளுமன்ற உறுப்பினர் றிசாத் பதியுதீன் அண்மையில் சுகயினமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

அவர் விரைவில் சுகமாகி விரைவில் விடுதலை செய்யப்பட வேண்டும் என்றும் அநியாயமாக சிறையில் அடைக்கப்பட்டவர்கள் விடுதலை பெற வேண்டும் என்றும் கல்முனை பட்டின ஜும்மா பள்ளிவாசல் பேஸ் இமாம் துஆ பிராத்தனை நிகழ்த்தினார்.

இந்த துஆ பிராத்தனை நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் உயர்பீட உறுப்பினர் ஜுனைதின் மான்குட்டி, கல்முனை பிராந்திய முக்கியஸ்தர் கலீல் முஸ்தபா உட்பட கட்சி ஆதரவாளர்கள் பலரும் சுகாதார வழிமுறைகளை பேணி கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad