இலவசக் கல்வியை தனியார் மயப்படுத்த ஒருபோதும் இடமளிக்க முடியாது : ஆர்ப்பாட்டத்தில் அநுரகுமார சூளுரை - News View

Breaking

Post Top Ad

Saturday, July 17, 2021

இலவசக் கல்வியை தனியார் மயப்படுத்த ஒருபோதும் இடமளிக்க முடியாது : ஆர்ப்பாட்டத்தில் அநுரகுமார சூளுரை

(இராஜதுரை ஹஷான்)

அரசாங்கம் இலவசக் கல்வியை இராணுவ மயமாக்கும் நிகழ்ச்சி நிரலுக்கு அமைய செயற்படுகிறது. பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்ட மூலத்தை அரசாங்கம் மீளப் பெற்றுக் கொள்ள வேண்டும். இலவசக் கல்வியை தனியார் மயப்படுத்த ஒருபோதும் இடமளிக்க முடியாது என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

மக்கள் விடுதலை முன்னணியினர், ஆசிரிய தொழிற்சங்கத்தினர் மற்றும் சிவில் அமைப்பினர் ஒன்றினைந்து இன்று சனிக்கிழமை கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டார்கள். இதன்போது ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், இலவசக் கல்வியை தனியார் மயப்படுத்தும் நல்லாட்சி அரசாங்கத்தின் நோக்கத்தை தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்து செல்கிறது.

சிவில் சேவைகள் அனைத்தும் தற்போது இராணுவ மயப்படுத்தலுக்கு அடித்தளமிட்டுள்ளது.

இதனிடையில் இலவசக் கல்வியையும் இராணுவ மயமாக்கும் முயற்சியை கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்ட மூலத்தின் ஊடாக அரசாங்கம் முன்னெடுத்துள்ளது என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad