பிரேமதாச மைதானத்தின் ஊடக அறை மூடப்பட்டது - News View

Breaking

Monday, July 26, 2021

பிரேமதாச மைதானத்தின் ஊடக அறை மூடப்பட்டது

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான முதல் டி-20 போட்டிக்கு அமைக்கப்பட்ட ஊடக அறையில் அனைத்து ஊடக நடவடிக்கைகளையும் நேற்றைய தினம் திடீரென நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ஊடக அறையில் இணைக்கப்பட்டிருந்த இலங்கை கிரிக்கெட்டின் ஊழியர் ஒருவர் கொவிட்-19 வைரஸ் பாதிப்புக்குள்ளானது உறுதி செய்யப்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கையை எடுக்க அறிவுறுத்தப்பட்டது.

போட்டி தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு கொழும்பு ஆர்.பிரேமதாச மைதான சோதனை மையத்தில் மேற்கொள்ளப்பட்ட விரைவான ஆன்டிஜென் பரிசோதனையில் குறித்த ஊழியர் கொரோனா தொற்றுக்குள்ளாகி இருப்பது கண்டறியப்பட்டது.

அதையடுத்தே சுகாதார அமைச்சின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி, இலங்கை கிரிக்கெட் முதல் போட்டியின் போது ஊடக அறையின் நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டது.

ஊடக அறை கிருமி நீக்கம் செய்யப்பட்ட பின்னர் இரண்டாவது டி-20 போட்டிக்காக மீண்டும் திறக்கப்படும் என்று இலங்கை கிரிக்கெட் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

எவ்வாறெனினும் வைரஸ் தொற்றுள்ள கிரிக்கெட் நிறுவனத்தின் ஊழியர் தற்சமயம் தனிமைப்படுத்தப்பட்டு, சிகிச்சை மேற்கொண்டு வருகிறார்.

No comments:

Post a Comment