தாயைத் தேடித் தவித்த திமிங்கில குட்டி இறந்தது - News View

About Us

About Us

Breaking

Tuesday, July 27, 2021

தாயைத் தேடித் தவித்த திமிங்கில குட்டி இறந்தது

நியூஸிலாந்து கடலில் சுமார் 2 வாரங்களாகத் தாயைத் தேடித் தவித்த ஓர்க்கா என்ற வகை திமிங்கிலக் குட்டி உயிரிழந்தது.

சுமார் 2.5 மீற்றர் உயரமுள்ள அந்தத் திமிங்கிலத்தின் வயது 4 லிருந்து 6 மாதங்கள் வரை இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. 

அது தனது திமிங்கிலக் கூட்டத்தை விட்டுப் பிரிந்து, வெல்லிங்டன் நகர் கரையோரம் ஒதுங்கியது.

தோவா என்று பெயரிடப்பட்ட அந்தத் திமிங்கிலத்தால் பெருங்கடலில் தனியாக உயிர் பிழைக்க முடியாது. அதனால், அதற்கு உதவ நூற்றுக்கணக்கானோர் முன்வந்தனர்.

அதற்கென தனியிடம் அமைத்து, 4 மணி நேரத்திற்கு ஒருமுறை உணவளிக்கப்பட்டது. அதன் தாயைக் கண்டுபிடிக்கத் தேடல் பணிகளும் தீவிரமாக நடைபெற்றன. 

ஆனால், கடந்த சனிக்கிழமை இரவு திமிங்கிலக் குட்டியின் உடல்நிலை கவலைக்கிடமானது. பின்னர், அது உயிரிழந்துள்ளது. 

நியூஸிலாந்தில், ஓர்க்கா வகை திமிங்கிலங்கள் அழிந்துபோகும் அபாயத்தை எதிர்நோக்குபவையாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.

அந்த வகை திமிங்கிலங்கள் சுமார் 200 தான் எஞ்சியிருப்பதாகக் கூறப்படுகிறது.

No comments:

Post a Comment