பாராளுமன்றில் முன்வைக்கவுள்ள நிதி சட்டமூலத்திற்கு எதிராக 8 மனுக்கள் : 7 திருத்தங்கள் உள்ளதாக சட்டமா அதிபர் அறிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Wednesday, July 28, 2021

பாராளுமன்றில் முன்வைக்கவுள்ள நிதி சட்டமூலத்திற்கு எதிராக 8 மனுக்கள் : 7 திருத்தங்கள் உள்ளதாக சட்டமா அதிபர் அறிவிப்பு

பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள நிதி சட்ட மூலத்தில் 7 திருத்தங்களை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் உச்ச நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

குறித்த நிதி சட்டமூலத்தின் 7 பிரிவுகளில் இத்திருத்தங்கள் மேற்கொள்ளவுள்ளதாக அவர் உச்ச நீதிமன்றுக்கு அறிவித்துள்ளார்.

குறித்த நிதி சட்டமூலம் அரசியலமைப்பிற்கு எதிரானது என தாக்கல் செய்யப்பட்ட பல்வேறு மனுக்கள் தொடர்பான விசாரணை உச்ச மன்றில் எடுத்துக் கொள்ளப்பட்டபோது, சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான சிரேஷ்ட அரச தரப்பு சட்டத்தரணி நிர்மலன் விக்னேஸ்வரன் இதனைத் தெரிவித்தார்.

ஜூலை 29ஆம் திகதி பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் முன்வைக்கப்பட்டுள்ள குறித்த நிதி சட்டமூலத்திற்கு எதிராக இதுவரை எட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி. எரான் விக்ரமரத்ன, மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் எம்.பி. சுனில் ஹந்துன்னெத்தி, இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தின் (CBEU) முன்னாள் பிரதிச் செயலாளர் எகேஸ்வர கோட்டேகொட விதான, ஐ.தே.க. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சமன் ரத்னப்பிரிய, நாகானந்த கொடிதுவக்கு, மாற்றுக்கு கொள்கைக்கான மையம் உள்ளிட்டோரால் இதுவரை எட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன

குறித்த மனுக்கள் நீதிபதி பிரியந்த ஜயவர்தன, நீதிபதி குமுதினி விக்ரமசிங்க, நீதிபதி ஷிரான் குணரத்ன ஆகியோர் அடங்கிய மூன்று நீதிபதிகள் கொண்ட குழு முன்னிலையில் இன்று (28) விசாரணைக்கு உட்படுத்தபபட்டிருந்தது.

அரசியலமைப்பை மீறும் குறித்த சட்டமூலத்தை முழுமையாக அல்லது அதன் ஒரு பகுதியை வாக்கெடுப்பிற்கு விட்டு பொது மக்களின் ஆணையை பெறுவது அவசியம் எனவும், பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையும் அவசியம் எனவும் அறிவிக்குமாறு மனுதாரர்கள் தங்களது மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த சட்டமூலம், வருமானவரிச் சட்டங்களின் கீழ் பல்வேறு வகையான வரிகளை மோசடி செய்யும் நபர்களுக்கு ஒத்துழைக்கும் வகையில் அமைவதாக உள்ளதாக மனுதாரர்கள் தங்களது மனுவில் குற்றம் சாட்டியுள்ளனர்.

No comments:

Post a Comment