யாழில் எரிவாயுவை விற்பனை செய்த வர்த்தகர்கள் மீது வழக்குத் தாக்கல் - News View

Breaking

Post Top Ad

Monday, July 19, 2021

யாழில் எரிவாயுவை விற்பனை செய்த வர்த்தகர்கள் மீது வழக்குத் தாக்கல்

யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரின் கட்டளைக்கு அமைவாகவும் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் வட மாகாண உதவிப்பணிப்பாளரின் வழிகாட்டலுக்கு அமைவாகவும் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் உத்தியோகத்தர்களால் இன்றையதினம் (19) யாழ்ப்பாணம், வேலணை, புளியங்கூடல், ஊர்காவற்றுறை ஆகிய பிரதேசங்களில் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.

மேலும், உரம் தொடர்பான கள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபைக்கு கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகள் விசாரணை செய்யப்பட்டதுடன் சட்டவிரோதமான வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்ட வர்த்தகர்கள் மீதும் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டது.

அத்தோடு எரிவாயு விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்களும் பரிசோதனை செய்யப்பட்டதோடு, சட்டவிரோதமாக எரிவாயு விற்பனை செய்த வர்த்தகர்கள் மீது வழக்குத் தாக்கல் செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad