வீட்டுப் பணியாளர்களின் கெளரவத்துக்காக பல முடிவுள் எடுக்கப்பட்டன - News View

About Us

About Us

Breaking

Wednesday, July 28, 2021

வீட்டுப் பணியாளர்களின் கெளரவத்துக்காக பல முடிவுள் எடுக்கப்பட்டன

நாட்டில் நபர் ஒருவர் வேலை வாய்ப்பினை பெற்றுக் கொள்வதற்கான குறைந்த பட்ச வயதெல்லையை 18 ஆக உயர்த்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், அடுத்த மூன்று மாதங்களுக்குள் இது தொடர்பான சட்டம் இயற்றப்படும் என தொழில்துறை அமைச்சர் நிமல் சிறிபால டிசில்வா தெரிவித்துள்ளார்.

அமைச்சர் நிமல் சிறிபால டிசில்வா தலைமையில் தெழில்துறை அமைச்சில் நேற்று தொழிலாளர் துறை, சட்டமா அதிபர் துறை, நீதி அமைச்சகம், பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகம், தேசிய சிறுவர்கள் பாதுகாப்பு ஆணையம், சர்வதேச தொழிலாளர் அமைப்பு மற்றும் ஐக்கிய நாடுகளின் சிறுவர்கள் நிதியம், ஐ.நா. சிறுவர் நிதியம் ஆகியவற்றின் பிரதிநிதிகளுக்கிடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே மேற்கண்ட தீர்மானம் எடுக்கப்பட்டது.

அத்துடன் இதன்போது மேலும் பல முடிவுள் எடுக்கப்பட்டன.

அனைத்து வீட்டுத் தொழிலாளர்களையும் மாவட்ட தொழிலாளர் அலுவலகத்தில் தங்கள் முதலாளிகளால் பதிவு செய்தல்.

குறைந்தபட்ச ஊதியத்தை உறுதி செய்வதற்காக தேசிய குறைந்தபட்ச ஊதியச் சட்டத்தின் கீழ் வீட்டுப் பணியாளர்களை உள்ளடக்குதல்.

சம்பந்தப்பட்ட விதிமுறைகளைத் திருத்துவதன் மூலம் ஊழியர் சேமிப்பு நிதி (EPF) மற்றும் ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதி (ETF) ஆகியவற்றின் கீழ் வீட்டுப் பணியாளர்களை உள்ளடக்குதல்.

வேலை நேரம், ஓய்வு காலம் மற்றும் விடுப்பு ஆகியவற்றை ஒழுங்குபடுத்துதல்.

பாதுகாப்பான மற்றும் நியாயமான பணிச்சூழலை உறுதி செய்யுதல்.

வேலைவாய்ப்பை நிறுத்தும்போது நியாயமான ஒய்வுதவி செலுத்துவதை உறுதிசெய்தல்.

தொழிலாளி வழங்கும் சேவையின் தரத்தை உறுதி செய்வதற்காக வீட்டுத் தொழிலாளர்களுக்கு ஒரு “நடத்தை விதிமுறையை” அறிமுகப்படுத்துதல்.

இந்த திட்டங்களின் நோக்கங்கள் வீட்டுத் தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாப்பது மட்டுமல்லாமல், அவர்களின் தொழிலின் கெளரவத்த‍ை உறுதி செய்வதும் ஆகும் என்றும் அமைச்சர் இதன்போது வலியுறுத்தினார்.

No comments:

Post a Comment