எமக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வருபவர்களுக்கு மக்கள் நம்பிக்கை இல்லாது போனது ஏன் என்பதை சிந்திக்க வேண்டும் - ரோஹித அபேகுணவர்தன - News View

About Us

About Us

Breaking

Monday, July 19, 2021

எமக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வருபவர்களுக்கு மக்கள் நம்பிக்கை இல்லாது போனது ஏன் என்பதை சிந்திக்க வேண்டும் - ரோஹித அபேகுணவர்தன

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

நாம் இன்று எதிர்கொள்ளும் நெருக்கடி நிலைமைகளுக்கு கடந்த நல்லாட்சி அரசாங்கமே காரணம். கடந்த ஐந்து ஆண்டுகளில் நாட்டை நாசமாக்கிவிட்டு இன்று மோசமான நாட்டையே எமது கைகளில் ஒப்படைத்துள்ளனர் என அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று திங்கட்கிழமை, அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான முதல் நாள் விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், அமைச்சர் கம்மன்பிலவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை சபைக்கு கொண்டுவந்துள்ள எதிர்க்கட்சியினர் பிரேரணையை முறையாக முன்வைக்க தெரியாது தடுமாறுகின்றனர்.

அனுபவம்மிக்க, சிரேஷ்ட உறுப்பினர்கள் இருக்கும் எதிர்க்கட்சியின் ஒரு நம்பிக்கையில்லா பிரேரணையை முறையாக முன்வைக்க முடியாதுள்ளது. இதற்கு ரணில் விக்கிரமசிங்க திருத்தங்களையும் கொண்டுவருகின்றார்.

இவர்கள் ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும், எமக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரும் இவர்களுக்கு மக்கள் நம்பிக்கை இல்லாது போனது ஏன் என்பதை இவர்கள் சிந்திக்க வேண்டும்.

No comments:

Post a Comment