வெளிநாட்டு வேலைகளுக்கு செல்வோருக்கு தடுப்பூசி - நாரஹேன்பிட்டி இராணுவ ஆஸ்பத்திரியில் ஏற்பாடு - News View

Breaking

Wednesday, July 28, 2021

வெளிநாட்டு வேலைகளுக்கு செல்வோருக்கு தடுப்பூசி - நாரஹேன்பிட்டி இராணுவ ஆஸ்பத்திரியில் ஏற்பாடு

வெளிநாட்டு வேலை வாய்ப்பு பெற்றுச் செல்வோருக்கு இராணுவ வைத்தியசாலையில் தடுப்பூசி ஏற்றப்பட உள்ளது.

நாரஹேன்பிட்டியில் அமைந்துள்ள இராணுவ வைத்தியசாலையில் இன்றைய தினம் முதல் தடுப்பூசி ஏற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்து கொண்டு வெளிநாட்டு வேலைகளுக்காக பயணம் செய்வோர் இவ்வாறு கொவிட் தடுப்பூசி பெற்றுக் கொள்ள முடியும் என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திரா சில்வா தெரிவித்துள்ளார். 

மேலும், வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் தொழில் வாய்ப்பு பெற்றுச் செல்லும் மாணவ மாணவியருக்கு கொவிட் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் இராணுவ வைத்தியசாலையில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 

இதேவேளை, கொவிட் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment