முஸ்லிம் தனியார் சட்டத்திருத்த விடயத்தில் மார்க்க அறிஞர்களுடனும் முஸ்லிம் பிரதிநிதிகளுடனும் கலந்துரையாடி தீர்மானிக்க வேண்டும் - புதிய எம்.பியாக நியமிக்கப்பட்டுள்ள பசில் ராஜபக்ஸவுக்கும் முன்கூட்டி வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றேன் : ஹரீஸ் எம்.பி - News View

About Us

About Us

Breaking

Wednesday, July 7, 2021

முஸ்லிம் தனியார் சட்டத்திருத்த விடயத்தில் மார்க்க அறிஞர்களுடனும் முஸ்லிம் பிரதிநிதிகளுடனும் கலந்துரையாடி தீர்மானிக்க வேண்டும் - புதிய எம்.பியாக நியமிக்கப்பட்டுள்ள பசில் ராஜபக்ஸவுக்கும் முன்கூட்டி வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றேன் : ஹரீஸ் எம்.பி

அபு ஹின்ஸா & சர்ஜுன் லாபீர்

முஸ்லிம்களின் தனியார் சட்டம் மற்றும் ஏனைய முஸ்லிம்களின் விடயங்களில் அரசாங்கம் திருத்தங்கள் மேற்கொள்ளும் போது முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கலந்துரையாடி முடிவு எடுக்க வேண்டும் என திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பிரதித் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்தார்.

இன்று (07) மாலை பாராளுமன்றத்தில் நடைபெற்ற ஏற்றுமதி திருத்த சட்டமூல விவாதத்தில் கலந்துகொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

தொடர்ந்தும் அங்கு உரையாற்றிய அவர் தனதுரையில், முஸ்லிம் சமூக மத உரிமைகள் தொடர்பில் சர்வதேச அரங்கில் பல்வேறு விமர்சனங்கள் உள்ளது. நீதியமைச்சர் முஸ்லிம் தனியார் சட்டத்தில் திருத்தங்களை செய்ய பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறார். இது தொடர்பில் 10 முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அவரை சந்தித்து பேசியிருந்தோம். அவர் இது சம்பந்தமாக மேலதிக சில திருத்தங்களை செய்வதாக கூறியிருக்கிறார். 

இது விடயமாக அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் அம்பாறை கிளை தலைவர் என்னுடன் தொடர்புகொண்டு முஸ்லிம் எம்.பிக்களுக்கு இந்த விடயம் தொடர்பில் காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். 

முஸ்லிம் மக்களினதும், முஸ்லிம் மக்கள் பிரதிநிதிகளினதும் விருப்புக்கு மாறாக எதனையும் செய்ய வேண்டாம் என இந்த அரசாங்கத்திற்கு நாங்கள் வேண்டுகோள் விடுக்கிறோம். 

காதி நீதிமன்றத்தின் பெயரில் மயக்கம் இருக்கலாம். அந்த இடத்தில் கடமையாற்றுபவர் நிதிபதியல்ல. அவர் ஒரு உத்தியோகத்தரே. இது தொடர்பான சீர்திருத்தங்களை செய்ய வேண்டுமே ஒழிய முற்றாக அந்த முறைமையை ஒழிக்க வேண்டும் என்பது தவறான விடயம். 

திருமண விடயத்திலும் கூட மார்க்க அறிஞர்களுடனும் முஸ்லிம் பிரதிநிதிகளுடனும் கலந்துரையாடி இவ்விடயத்தில் நீதியமைச்சர் அலி சப்ரி அவர்கள் தீர்மானத்தை எடுக்க வேண்டும். 

எமது நாட்டின் பொருளாதாரம் ஏற்றுமதி துறையில்தான் தங்கியுள்ளது. முன்னாள் அமைச்சர் லலித் அத்துலத் முதலியவர்கள் எமது நாட்டின் பொருளாதார உயர்வுக்காக பல்வேறு திட்டங்களை வகுத்த ஆரம்பப்புள்ளியாக இருக்கிறார். 

எமது நாட்டின் ஏற்றுமதி துறை வளர்ச்சிக்கு எமது நாட்டின் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ  ஜனாதிபதியாக இருந்த போது பல்வேறு முக்கிய முன்னெடுப்புக்களை மேற்கொண்டு உட்கட்டமைப்பு அபிவிருத்திகளையும் கடுகதி பாதைகளை நிறுவியதனுடாகவும் முன்னேற்றம் ஏற்படும் எனும் நம்பிக்கை எமக்கிருந்தது. துரதிஷ்டவசமாக எங்களின் ஏற்றுமதி வருமானம் பாதிப்படைந்துள்ளது.

ஜனாதிபதி மற்றும் இங்கு உள்ள அதுக்கு பொறுப்பான அமைச்சர்கள் எமது நாட்டு மக்களுக்குரிய எதிர்காலம் ஏற்றுமதி வருமானத்தில் தங்கியுள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இப்போது நாட்டில் பணவீக்கம் அதிகரித்து செல்லும் சூழ்நிலையில் நாட்டில் பெரும் முதலீட்டை செய்துள்ள வர்த்தகர்கள், உற்பத்தியாளர்கள் மிகப்பெரும் சவாலொன்றை எதிர்நோக்கியுள்ளார்கள். அவர்களின் வங்கி நடவடிக்கைகளும் பணவீக்கம் காரணமாக சவாலை சந்தித்துள்ளது. அரசாங்கம் இது தொடர்பில் தெளிவான பொருளாதார கொள்கையை உருவாக்கி சவால்களை முறியடிக்க முன்வர வேண்டும்.

ஏற்றுமதியில் புதிய சவாலாக எமது நாடு ஐரோப்பிய ஜூனியனின் ஜீ.எஸ்.பி. பிளஸ் எனும் வரிச் சலுகை நிறுத்தப்படுமா எனும் கேள்வி எழுந்துள்ள சூழ்நிலையில் எமது நாடு இப்போது அனுபவித்து வருகிறது. இதற்கு காரணம் என்னவெனில் பயங்கரவாத தடைச்சட்டம், சிறுபான்மை மக்களின் அடிப்படை உரிமை மீறல், மத உரிமை மீறல் போன்றவற்றை கொண்டு கடும்வாதமாக ஐரோப்பிய ஜூனியன் நடந்துகொள்ள இருக்கிறது. இது சம்பந்தமாக நீதியமைச்சர் பயங்கரவாத தடைச்சட்டத்தில் பாரிய மாற்றத்தை கொண்டுவரப்போவதாக தெரிவித்துள்ளார். அதை அரசாங்கம் அதை செய்ய வேண்டும்.

கடந்த காலங்களில் பொருளாதாரத் துறையில் பெரிய பங்காற்றி அனுபவம் கொண்ட ஒருவரை பொருளாதார கட்டமைப்பை மீளுருவாக்கம் செய்வதற்காக எண்ணி முன்னாள் பொருளாதார அமைச்சராக இருந்த பெசில் ராஜபக்சவை பாராளுமன்ற உறுப்பினராக ஆளும் கட்சி இன்று நியமித்துள்ளது. அவருக்கு தகுதியான அமைச்சுப்பதவிகளையும் இந்த அரசாங்கம் எதிர்வரும் நாட்களில் வழங்க தயாராக உள்ளது. 

புதிய எம்.பியாக நியமிக்கப்பட்டுள்ள பசில் ராஜபக்ஸவுக்கு முன்கூட்டிய வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதுடன் இந்த நாட்டின் வர்த்தகர்கள், பொதுமக்கள் எதிர்பார்த்திருக்கும் மாற்றத்தை பசில் ராஜபக்ஸ செய்ய வேண்டும்.

மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாத் பதியுதீன் போன்ற மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்ற உத்தரவின்றி இந்த சட்டத்தின் மூலம் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த பல மாதங்களாக அவர் சிறையில் இருக்கிறார். இப்படி கைது செய்யப்பட்ட அவரை போன்றவர்களை இந்த அரசாங்கம் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்பதுதான். அத்துடன் தமிழ் அரசியல் கைதிகளும் விடுதலை செய்யப்பட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். 

மேலும் 26 சுகாதார மாவட்டங்களில் ஒன்றான கல்முனை சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவில் தடுப்பூசிகளை வழங்க குறித்த அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தும் இன்னும் அந்த தடுப்பூசிகள் வழங்கப்படவில்லை. அமைச்சர் இது தொடர்பில் உடனடி நடவடிக்கை எடுத்து அந்த பிரதேசத்திற்கு தடுப்பூசிகளை வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

No comments:

Post a Comment