மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் - News View

About Us

About Us

Breaking

Saturday, July 3, 2021

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர்

பாகிஸ்தான் முன்னாள் முன்னாள் பிரதமர் சர்தாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஊழல் வழக்குகளில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் சர்தாரி சிகிச்சை பெறுவதற்காக கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பரில் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் ஆசிப் அலி சர்தாரி (65). சமீப நாட்களாக இவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து அவர் கராச்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

கடந்த ஆண்டு முதலே உடல்நலக் குறைவால் அவதிப்பட்ட சர்தாரி, தன் மீதான வழக்குகளுக்காக நீதிமன்றங்களுக்கு சென்று வருவதற்கு கடும் சிரமப்பட்டார்.

இந்நிலையில், அவருக்கு திடீரென மீண்டும் உடல்நல பாதிப்பு ஏற்பட்டது. இதனால் கராச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்ந்த அவருக்கு மருத்துவர்கள் ரத்த பரிசோதனைகள் எடுத்து, தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment