போராட்டங்களை முடக்கவே திங்கட்கிழமை முதல் சகல அரச உத்தியோகத்தர்களும் சேவைக்கு அழைப்பு : ரோஹிணி கவிரத்ன - News View

About Us

About Us

Breaking

Saturday, July 31, 2021

போராட்டங்களை முடக்கவே திங்கட்கிழமை முதல் சகல அரச உத்தியோகத்தர்களும் சேவைக்கு அழைப்பு : ரோஹிணி கவிரத்ன

(எம்.மனோசித்ரா)

அதிபர், ஆசிரியர் தொழிற்சங்கங்களின் சம்பள முரண்பாட்டுக்கு தீர்வை வழங்காது, அவர்களின் போராட்டத்தை முடக்குவதற்காகவே திங்கட்கிழமை முதல் சகல அரச உத்தியோகத்தர்களும் சேவைக்கு அழைக்கப்பட்டிருக்கின்றனர் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹிணி கவிரத்ன தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், டெல்டா தொற்று பரவல் ஒருபுறம் அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில் திங்கட்கிழமை முதல் சகல அரச உத்தியோகத்தர்களும் சேவைக்கு அழைக்கப்பட்டிருக்கின்றனர்.

பஸ் மற்றும் புகையிரதம் உள்ளிட்ட பொதுப் போக்கு வரத்துக்களில் பயனிப்பதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களால் எவ்வாறு சிரமம் இன்றி சேவைக்கு சமூகமளிக்க முடியும் ?

நாட்டில் காணப்படுகின்ற சகல சிக்கலான நிலைமைகளையும் அரசாங்கம் அதன் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக மாத்திரமே பயன்படுத்திக் கொள்கிறது.

கொவிட் முதலாம் அலையை மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றுக் கொள்வதற்கும், இரண்டாம் அலையை 20 ஆவது திருத்தத்தை நிறைவேற்றிக் கொள்வதற்கும், மூன்றாம் அலையை துறைமுக நகர சட்ட மூலத்தை நிறைவேற்றிக் கொள்வதற்கும் பயன்படுத்திக் கொண்ட அசராங்கம் தற்போதைய நிலைவரத்தை அதிபர் ஆசிரியர்களின் போராட்டத்தை முடக்குவதற்கு பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கிறது என தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment