மாகாணங்களிடையே மீண்டும் பொதுப் போக்குவரத்து என்கிறார் திலும் அமுனுகம - News View

Breaking

Friday, July 23, 2021

மாகாணங்களிடையே மீண்டும் பொதுப் போக்குவரத்து என்கிறார் திலும் அமுனுகம

மாகாணங்களுக்கு இடையேயான பொதுப் போக்குவரத்தை எதிர்வரும் ஓகஸ்ட் 01ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை முதல் முன்னெடுக்கவுள்ளதாக, போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

கொவிட்-19 பரவல் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த மாகாணங்களுக்கு இடையிலான பஸ் மற்றும் புகையிரத பொதுப் போக்குவரத்து சேவைகள், கடந்த ஜூலை 14ஆம் திகதி முதல் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் அத்தியாவசிய சேவைகளுக்காக நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தது.

இதனைத் தொடர்ந்து புதிய கொவிட் திரிபுகள் கிராமங்களுக்கு செல்வதை தடுக்கும் நோக்கில், மாகாணங்களுக்கு இடையிலான பொதுப்போக்குவரத்து கடந்த வாரம் (17) முதல் ஓகஸ்ட் 01 ஆம் திகதி வரை மீண்டும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பிலுள்ள 30 வயதுக்கு மேற்பட்டவர்களின் பெரும்பாலானோருக்கு இரு வாரங்களுக்குள் தடுப்பூசி செலுத்தி முடிப்பதன் அடிப்படையில் மீண்டும் ஓகஸ்ட் 01ஆம் திகதி முதல் மாகாணங்களுக்கிடையிலான பொதுப் போக்குவரத்தை ஆரம்பிக்க முடியுமென, கொவிட் செயலணி கூட்டத்தின் போது எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் ஓகஸ்ட் 01 வரை மாகாணங்களிடையேயான பொதுப் போக்குவரத்து இடைநிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment