ஒலிம்பிக் பதக்க நிகழ்வுகளில் முகக்கவசங்களை அகற்றும் வீரர்கள் - அமைப்பாளர்கள் கண்டனம் - News View

About Us

About Us

Breaking

Sunday, July 25, 2021

ஒலிம்பிக் பதக்க நிகழ்வுகளில் முகக்கவசங்களை அகற்றும் வீரர்கள் - அமைப்பாளர்கள் கண்டனம்

டோக்கியோ ஒலிம்பிக் பதக்கம் அணியும் நிகழ்வுகளின் போது, முகக்கவசம் அணிவது கட்டாயம் என்று சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி ஞாயிற்றுக்கிழமை வலியுறுத்தியுள்ளது.

நீச்சல் வீரர்கள் பதக்க மேடையில் முகக்கவசங்களை அகற்றி, ஏனைய வீரர்களை அரவணைத்துக் கொள்ளும் செயற்பாடுகள் வெளியான நிலையிலேயே இந்த அறிவித்தல் மீண்டும் வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கான விளையாட்டு அமைப்பாளர்களின் கடுமையான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, அனைத்து விளையாட்டு வீரர்கள், ஊழியர்கள் மற்றும் ஊடகவியலாளர்களும் அரங்கத்திற்கு உள்ளேயும் வெளியேயும் அனைத்து ஒலிம்பிக் இடங்களிலும் முகக்கவசம் அணிவது கட்டாயமாகும்.

கிர்கிஸ்தான் மற்றும் தஜிகிஸ்தானின் ஒலிம்பிக் அணியினர் வெள்ளிக்கிழமை தொடக்க விழாவில் தேசிய அரங்கம் வழியாக பெரும்பாலும் முகக்கவசம் இல்லாமல் அணிவகுத்து வந்தனர்.

இது கொவிட்-19 நெறிமுறைகளுக்கு ஏற்ப முகக்கவசம் அணிந்த பிற தேசிய அணிகளுடன் ஒப்பிடும்போது ஒரு மோசமான வேறுபாடான செயற்பாடு ஆகும்.

விளையாட்டு தொடர்பான நபர்களின் மேலும் 10 கொவிட்-19 தொற்றுக்கு சாதகமாக சோதனை செய்ததாக அமைப்பாளர்கள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளனர்.

ஜூலை 1 முதல் டோக்கியோ விளையாட்டுகளுடன் தொடர்புடைய 130 க்கும் மேற்பட்டவர்கள் கொவிட்-19 தொற்றுக்கு சாதகமாக சோதனை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment