தந்தை, மாமியால் துன்புறுத்தல்களுக்குள்ளாக்கப்பட்ட சிறுமி பொலிஸாரால் மீட்பு - News View

Breaking

Sunday, July 25, 2021

தந்தை, மாமியால் துன்புறுத்தல்களுக்குள்ளாக்கப்பட்ட சிறுமி பொலிஸாரால் மீட்பு

(எம்.மனோசித்ரா)

நுரைச்சோலை பிரதேசத்தில் தந்தை மற்றும் தந்தையின் சகோதரி ஆகியோரால் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ள 13 வயதுடைய சிறுமியொருவர் மீட்கப்பட்டுள்ளதோடு, சம்பவம் தொடர்பில் சிறுமியின் தந்தையும் அவரது சகோதரியும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

நுரைச்சோலை பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய நுரைச்சோலை பிரதேசத்திலுள்ள வீடொன்றில் துன்புறுத்தல்களுக்குள்ளாக்கப்பட்டுள்ள 13 வயதுடைய சிறுமியொருவர் மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த சிறுமியை துன்புறுத்தல்களுக்குள்ளாக்கியமை தொடர்பில் அவரது தந்தை மற்றும் தந்தையின் சகோதரி (சிறுமியின் மாமி) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர் ஆகஸ்ட் 2 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் நுரைச்சோலை பொலிஸாரால் தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது.

No comments:

Post a Comment