பெற்றோர்களே அவதானம் : கைத்தொலைபேசி வெடித்து மாணவி உயிரிழப்பு - News View

Breaking

Saturday, July 31, 2021

பெற்றோர்களே அவதானம் : கைத்தொலைபேசி வெடித்து மாணவி உயிரிழப்பு

இந்தியாவில் குஜராத் மாநிலம் மெஹ்சானாவில் உள்ள பெச்சாராஜி தாலுகாவின் சேதாசன் கிராமத்தைச் சேர்ந்த 16 வயதுடைய மாணவி கைத்தொலைபேசி வெடித்து உயிரிழந்துள்ளார்.

குறித்த மாணவி கைத்தொலைபேசியை சார்ஜ் போட்டபடி பேசிய போது கைத்தொலைபேசி வெடித்து படுகாயமடைந்த மாணவி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பிரேத பரிசோதனை எதுவும் நடத்தாமல் அவரது உடலை அவரது குடும்பத்தினர் எரித்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த பொலிஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கொரோனா பொதுமுடக்கத்தால் பாடசாலை, பல்கலைக்கழக வகுப்புகள் இணையவழி கல்வி மூலம் நடப்பதால் மாணவர்களிடையே கைத்தொலைபேசி பயன்பாடு அதிகரித்துள்ளது.

இந்த சூழலில் கைத்தொலைபேசியை பாதுகாப்பாக பயன்படுத்துவது எப்படி என மாணவர்களுக்கு பெற்றோர் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது அவசியமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment