இலங்கையில் அஸ்ட்ரா செனிகா தடுப்பூசி பெற்றுக் கொண்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் வெளியான புதிய தகவல் - News View

About Us

About Us

Breaking

Saturday, July 31, 2021

இலங்கையில் அஸ்ட்ரா செனிகா தடுப்பூசி பெற்றுக் கொண்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் வெளியான புதிய தகவல்

(எம்.ஆர்.எம்.வசீம்)

அஸ்ட்ரா செனிகா முதலாம் கட்ட தடுப்பூசி பெற்றுக் கொண்டவர்களின் செயற்திறமை பிறபொருள் எதிரிகள் (என்டிபொடி) 16 வாரங்களுக்கு பின்னர் குறிப்பிடத்தக்க அளவில் குறைவடைவதாக சிறி ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் வைத்திய பீட ஆய்வுக்குழுவொன்று மேற்கொண்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த குறையும் அளவு நூற்றுக்கு 26.1 ஆக காணக்கூடியதாக இருப்பதாக ஆய்வுக்குழுவின் உறுப்பினரான கலாநிதி சந்திம ஜீவன்தர தெரிவித்தார்.

இருந்தபோதும் செயற்திறமை பிரபொருள் எதிரிகளில் குறைவு இருந்தாலும் நோய் எதிர்ப்பு சக்திக்கு நெருக்கமாக இருக்கும் ஞாபக கலகங்கள் செயற்திறமை மிக்கதாக இருப்பதாகவும் தெரியவந்திருக்கின்றது.

அதன் இரண்டாம் கட்ட தடுப்பூசியை பெற்றுக் கொண்ட பின்னர் பிறபொருள் எதிரிகளின் செயற்தமிறமை அதிகரிக்கும் என எதிர்பார்க்கின்றோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, அஸ்ட்ரா செனிகா முதலாம் கட்ட தடுப்பூசி பெற்றுக் காெண்டவர்களிடம் 16 வாரங்களிலும் சிறந்த பிறபொருள் எதிரிகளை காண்பித்தது.

இளைஞர்களின் அந்த பிரபொருள் எதிரிகளின் வீதம் நூற்றுக்கு 98 ஆக இருந்தது. 70 வயதுக்கு கூடியவர்களின் பிரபொருள் எதிரிகளின் அளவு 93.3 ஆக இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த தகவல்கள் அஸ்ட்ரா செனிகா முதலாம் கட்ட தடுப்பூசியை பெற்றுக் கொண்ட 553 பேரை பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட ஆய்விலேயே பெறப்பட்டதாவும் அவர் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment