முன்னாள் போராளிகள் கைக்கூலிகளாக இருக்க வேண்டும் என்பதையா அரசாங்கம் விரும்புகின்றது - இரா.சாணக்கியன் - News View

About Us

About Us

Breaking

Sunday, July 4, 2021

முன்னாள் போராளிகள் கைக்கூலிகளாக இருக்க வேண்டும் என்பதையா அரசாங்கம் விரும்புகின்றது - இரா.சாணக்கியன்

முன்னாள் போராளிகள் அரசாங்கத்தின் கைக்கூலிகளாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்திலா அரசாங்கம் செயற்படுகின்றதென நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கேள்வி எழுப்பியுள்ளார்.

மட்டக்களப்பில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஜனநாயக போராளிகள் கட்சியின் உறுப்பினர்களை இந்த அரசாங்கம் இலக்கு வைத்து, விசாரணை நடாத்துவதும் கைது செய்வதுமான செயற்பாடுகளை தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றது என இரா.சாணக்கியன் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதாவது புனர்வாழ்வளிக்கப்படாதவர்களாக இன்று தமிழர்களை காட்டிக் கொடுத்தவர்களை அரசாங்கம் தமது கையில் வைத்துக் கொண்டு, தமிழினத்தின் விடுதலைக்காக போராடி ஜனநாயக பாதைக்குவந்து அரசியல் செய்ய முன்வந்திருக்கும் உறுப்பினர்களை கைது செய்வதை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் போராளிகளை கைது செய்வதனையும் அவர்களை பழிவாங்குவதையும் அரசாங்கம் உடனடியாக நிறுத்த வேண்டும். மாறாக எங்களது போராட்டத்தினை காட்டிக் கொடுத்தவர்களை முதலில் கைது செய்து விசாரணையை முன்னெடுங்கள் என இரா.சாணக்கியன் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன் இந்த அரசாங்கம், முன்னாள் போராளிகள் கைக்கூலிளாக இருக்க வேண்டும் என்பதையா விரும்புகின்றது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

No comments:

Post a Comment