ஒலிம்பிக் வரலாற்றில் நீச்சல் போட்டியில் முதல் பதக்கம் வென்றது ஹொங்கொங் - News View

Breaking

Wednesday, July 28, 2021

ஒலிம்பிக் வரலாற்றில் நீச்சல் போட்டியில் முதல் பதக்கம் வென்றது ஹொங்கொங்

டோக்கியோ ஒலிம்பிக்கில் புதன்கிழமை நடைபெற்ற பெண்களுக்கான 200 மீட்டர் ஃப்ரீஸ்டைல் நீச்சல் போட்டியில் ஹொங்கொங்கின் சியோபன் ஹாகே வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.

ஒலிம்பிக் வரலாற்றில் நீச்சல் போட்டியில் ஹொங்கொங் பெறும் முதல் பதக்கம் இதுவாகும்.

இப் போட்டியில் அவுஸ்திரேலிய வீராங்கனையான அரியார்ன் டிட்மஸ் தங்கப் பதக்கம் வென்றார். அவர் பந்தைய தூரத்தை 1 நிமிடம், 53.50 வினாடிகளில் நிறைவு செய்து முதலிடம் பிடித்தார்.

இது டோக்கியோ ஒலிம்பிக்கில் அவுஸ்திரேலியா பெறும் ஆறாவது தங்கப் பதக்கமாகும்.

கனடாவின் பென்னி ஒலெக்ஸியாக் போட்டியில் மூன்றாவது இடத்தைப் பிடித்தமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment