தேயிலை மலையிலிருந்து உடற் பாகங்கள் சிதைவடைந்த நிலையில் சிசுவின் சடலம் மீட்பு - News View

Breaking

Post Top Ad

Tuesday, July 20, 2021

தேயிலை மலையிலிருந்து உடற் பாகங்கள் சிதைவடைந்த நிலையில் சிசுவின் சடலம் மீட்பு

நுவரெலியா, கந்தப்பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கொங்கோடியா தோட்ட தேயிலை மலையிலிருந்து, உடல் பாகங்கள் சிதைவடைந்த நிலையில் சிசுவின் சடலத்தை கந்தப்பளை பொலிஸார் இன்று (20) மதியம் மீட்டுள்ளனர்.

பிறந்து ஒரிரு நாட்களான இந்த சிசு, ஆண் சிசுவாகுமென அடையாளம் காணப்பட்டுள்ளதாக கந்தப்பளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டி.டி.விக்கிரமசிங்ஹ தெரிவித்தார்.

அதேநேரத்தில் சடலமாக மீட்கப்பட்ட சிசிவின் உடல் பகுதிகள் சிதைவடைந்து உள்ளன. கால்கள் காணாமல் போயுள்ளன என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

அத்துடன் கொங்கோடியா தோட்ட தொழிலாளர்கள் தேயிலை மலையில் கொழுந்து கொய்து கொண்டிருந்த போது நாய்யொன்று, சிசுவின் உடலத்தை கௌவிக் கொண்டு வந்ததையடுத்து தொழிலாளர்கள் இது தொடர்பாக கந்தப்பளை பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சிசுவின் உடலை மீட்டுள்ளனர்.

தற்போது சிசுவின் உடல், மரண பரிசோதணைக்காக நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிபதியின் உத்தரவின் பேரில் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இது குறித்த விசாரணைகளை கந்தப்பளை பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment

Post Bottom Ad