கொழும்பு மாநகர சபை ஆணையாளரை நீக்கி விட்டு, தகுதியான ஒருவரை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் : மேயர் ராேசி சேனாநாயக்க, மேல் மாகாண ஆளுநருக்கு கடிதம் - News View

About Us

About Us

Breaking

Monday, July 19, 2021

கொழும்பு மாநகர சபை ஆணையாளரை நீக்கி விட்டு, தகுதியான ஒருவரை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் : மேயர் ராேசி சேனாநாயக்க, மேல் மாகாண ஆளுநருக்கு கடிதம்

(எம்.ஆர்.எம்.வசீம்)

கொழும்பு மாநகர சபை நகர ஆணையாளரின் செயற்திறமையற்ற நடவடிக்கைகள் மற்றும் ஊழல் மோசடிகள் காரணமாக மாநகர மக்களுக்கான சேவைகள் தடைப்பட்டு வருகின்றன. அதனால் இந்த நிலைமை தொடராமல் தடுப்பதற்காக, தகுதியான ஆணையாளர் ஒருவரை நியமிக்க வேண்டும் என்பது மாநகர சபையை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித் தலைவர்களின் நிலைப்பாடாகும். அவர்களின் தீர்மானத்திற்கமைய தற்போதுள்ள கொழும்பு மாநகர சபை நகர ஆணையாளரை நீக்கி விட்டு, தகுதியான ஒருவரை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கொழும்பு மாநகர சபை மேயர் ராேசி சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

மேயர் ரோசி சேனாநாயக்க மேல் மாகாண ஆளுநர் எயார் மார்ஷல் ராெஷான் குணதிலக்கவுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, அரசியலமைப்பில் மாகாண ஆளுநர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் அதிகாரத்திற்கமைய, கொழும்பு மாநகர சபை நகர ஆணையாளர் பதவிக்கு கடந்த 2020.01.14 ஆம் திகதி உங்களால் நியமிக்கப்பட்ட ராேஷனி திஸாநாயக்கவின் செயற்பாடுகளால் கொழும்பு மாநகர சபையின் அனைத்து அபிவிருத்தி நடவடிக்கைகளும் தடைப்படாமல் இருப்பதற்கும் கொழும்பு மாநகர சபை காரியாலய உறுப்பினர்கள் தைரியமற்று அசெளகரியங்களுக்கு ஆளாவதை தடுப்பதற்காக, கொழும்பு மாநகர சபையின் அனைத்து உறுப்பினர்கள் சார்ப்பாக, அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித் தலைவர்களின் பெரும்பாலானவர்களின் கோரிக்கைக்கமைய, இது தொடர்பாக கலந்துரையாட பல தடவைகள் சந்தர்ப்பம் கோரி இருந்தோம். என்றாலும் இதுவரை அதற்கான சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.

என்றாலும் கடந்த இரண்டு வாரங்களாக நகர ஆணையாளர், தனது கடமை மற்றும் பொறுப்புக்களை தட்டிக்கழித்து, தான்தோன்றித்தனமாக மாநகர சபை அதிகாரிகளை மன அழுத்தங்களுக்கு ஆளாக்கி, சபையின் நடவடிக்கைகளுக்கு தடைகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளார்.

அதனால் நகரச பையின் பொறுப்புக்களை முறையாக நிறைவேற்ற தவறிய என்ற விடயத்தை அடிப்படையாகக் கொண்டு, அவருக்கு எதிராக முறையான ஒழுக்காற்று விசாரணை ஒன்றை மேற்கொள்ள வேண்டும். அத்துடன் நகர ஆணையாளர் பதவிக்கு தகுதியான அதிகாரி ஒருவரை நியமிக்கவும் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் கொழும்பு மாநகர சபை போன்ற பாரிய நிறுவனம் ஒன்றின் நகர ஆணையாளர் பதவி பொறுப்புக்களை, அது தொடர்பான அறிவு, அனுபவம் உள்ள ஒருவருக்கே பாெறுப்புடன் செயலாற்ற முடியும் என்பது எமது நம்பிக்கை.

அதனால் இந்த விடயங்களை கருத்திற் கொண்டு, நடைமுறை சாத்தியமான தீர்மானங்களை எடுக்க முடியுமான தகுதியான அதிகாரி ஒருவரை கொழும்பு மாநகர சபையின் நகர ஆணையாளர் பதவிக்கு நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அத்துடன் தற்போது அந்த பதவியில் இருக்கும் அதிகாரியினால் மேற்கொள்ளப்பட்டிருக்கும் ஊழல் மோசடி தொடர்பாக முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அதனால் அவை உடனடியாக நகர ஆணையாளர் பதவியில் இருந்து நீக்குமாறு மாநகர சபை மேயர் உள்ளிட்ட அனைத்து உறுப்பினர்கள் சார்ப்பாக கேட்டுக் கொள்கின்றேன்.

No comments:

Post a Comment