பேஸ்புக் மற்றும் பிற சமூக வலைத்தளங்களில் பரவும் தவறான தகவல்கள் மக்களை கொல்லுகிறது - குற்றம் சுமத்தினார் ஜோ பைடன் - News View

Breaking

Post Top Ad

Sunday, July 18, 2021

பேஸ்புக் மற்றும் பிற சமூக வலைத்தளங்களில் பரவும் தவறான தகவல்கள் மக்களை கொல்லுகிறது - குற்றம் சுமத்தினார் ஜோ பைடன்

பேஸ்புக் மற்றும் பிற சமூக வலைத்தளங்களில் பரவும் கொரோனா வைரஸ் குறித்த தவறான தகவல்கள் மக்களை கொல்வதாக ஜோ பைடன் குற்றம் சுமத்தியுள்ளார்.

கொரோனா பாதிப்பில் அமெரிக்கா தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது.‌ ஆனாலும் கடந்த ஜனவரியில் இருந்து அங்கு பாதிப்பு மற்றும் உயிரிழப்பு வெகுவாகக் குறைந்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தலைமையிலான நிர்வாகம் கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் தீவிர கவனம் செலுத்தியதன் மூலம் வைரஸ் பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனாலும் அமெரிக்காவில் பெரும்பாலான மக்கள் தடுப்பூசி போடுவதற்கு இன்னும் தயக்கம் காட்டி வருகிறார்கள்.

கொரோனா வைரஸ் குறித்தும், அதன் தடுப்பூசி குறித்தும் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பரவும் தவறான தகவல்களே இதற்கு காரணம் என குற்றம் சாட்டும் அமெரிக்க அரசு, தவறான தகவல்கள் பரவுவதை தடுப்பதற்கு நடவடிக்கைகளை எடுக்க சமூக வலைத்தள நிறுவனங்களுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது.

இந்நிலையில், வெள்ளை மாளிகையில் பத்திரிகையாளர்களை சந்தித்த ஜனாதிபதி ஜோ பைடனிடம் தடுப்பூசிகள் மற்றும் தொற்று நோய் குறித்து பொய்யை பரப்புவதில் பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களின் பங்கு குறித்து நிருபர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

அதற்கு ஜோ பைடன், “தடுப்பூசிகளை பற்றிய தவறான தகவல்களை எதிர்த்துப்‌‌ போராடுவதற்கு பேஸ்புக் மற்றும் பிற சமூக வலைத்தள நிறுவனங்கள் போதுமானதாக செயல்படவில்லை. இதன் மூலம் அவர்கள் (சமுக வலைத்தள நிறுவனங்கள்) மக்களை கொல்கிறார்கள்.‌ தடுப்பூசி போடாதவர்கள் மத்தியிலேயே வைரஸ் தொற்று பரவுகிறது” என பதில் அளித்தார்.

இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள பேஸ்புக் நிறுவனம், பொது சுகாதாரத்தைப் பாதுகாக்க கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். இதுவரை ஒரு கோடியே 80 லட்சத்துக்கும் அதிகமான தடுப்பூசிகள் பற்றிய தவறான தகவல்களை பேஸ்புக்கில் இருந்து நீக்கி உள்ளோம் என தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad