கேப்பாபிலவு தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து இலங்கை ஆசிரியர் சங்க செயலாளர், பௌத்த துறவிகள் கவனயீர்ப்பு போராட்டம் - News View

Breaking

Post Top Ad

Saturday, July 10, 2021

கேப்பாபிலவு தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து இலங்கை ஆசிரியர் சங்க செயலாளர், பௌத்த துறவிகள் கவனயீர்ப்பு போராட்டம்

கே .குமணன்

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்ட மூலத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் முல்லைத்தீவு கேப்பாபிலவு கொரோனா தடுப்பு மையத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள்.

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் மற்றும் பௌத்த துறவிகள் இருவர் உள்ளிட்டவர்கள் கேப்பாபிலவு விமானப் படைத் தளத்தின் தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள்.

இவர்கள் இன்று சனிக்கிழமை தனிமைப்படுத்தல் மையத்திலிருந்தே கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்துள்ளார்கள்.

கொத்தலாவ சட்டத்தினை உடன் கிழித்தெறி என்ற தமிழ், சிங்கள மொழிகளில் எழுதப்பட்ட  வாசகங்களை தாங்கியவாறு தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்து கவனயீர்ப்பினை முன்னெடுத்துள்ளார்கள்.

No comments:

Post a Comment

Post Bottom Ad